Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரிய கனிம வளம் - துருக்கியின் கனவுக்கு சீன ஆய்வு சவால்

அரிய கனிம வளம் - துருக்கியின் கனவுக்கு சீன ஆய்வு சவால்

தற்போது உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளுக்கு மாற்றாக இந்தப் படிவம் விரைவில் உருவெடுக்கும் வாய்ப்பு குறைவு

பகிரவும் WhatsApp Facebook

அரிய மண் தனிமங்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடிக்கத் துருக்கி முயன்றுவரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய கனிமப் படிவத்தில் பெரிய அளவிலான வணிக உற்பத்திக்குச் சவால்கள் இருப்பதாகச் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் கிசில்சாவோரென் கனிமப் படிவத்தின் சிக்கலான புவியியல் உருவாக்கத்தைச் சீன விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். கார்பனடைட் பாறைகளுடன் தொடர்புடைய அமைப்புகளில் அரிய மண் தனிமங்கள் எவ்வாறு திரண்டன என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. எனினும், தற்போது உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளுக்கு மாற்றாக இந்தப் படிவம் விரைவில் உருவெடுக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் யாங் சியாவோயோங், இங்குள்ள கனிமமயமாக்கல் சிறிய அளவிலேயே இருப்பதாகக் கூறியுள்ளார். பெரிய அரிய மண் தனிமப் படிவங்களின் அளவை இது இன்னும் எட்டவில்லை என்பதும் அவரது மதிப்பீடு. சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஹெபெய் புவியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அவர், இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, எஸ்கிசெஹிர் மாகாணத்தின் பெய்லிகோவா பகுதியில் மிகப்பெரிய கனிம வளம் இருப்பதாகத் துருக்கி அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அங்கு 1.25 லட்சம் மீட்டர் துளையிடலும், 59,000 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 1,200 டன் தாதுவைக் கையாளும் சோதனை ஆலையிலிருந்து, ஆண்டுக்கு சுமார் 5.70 லட்சம் டன் அளவிலான தொழிற்சாலை செயல்பாட்டுக்கு முன்னேறுவது அரசின் இலக்கு. இதற்குத் தேவையான சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தைப் பெறப் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.


விமானம், பாதுகாப்பு, விண்வெளி, உயிரி மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் அரிய மண் தனிமங்கள் பயன்படுகின்றன. இதனால், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்து, தேவைக்கு அதிகமானவற்றை ஏற்றுமதி செய்யத் துருக்கி விரும்புகிறது.
ஆனால், நிலத்தடியில் கனிமங்கள் இருப்பதைக் கண்டறிவதற்கும், அவற்றை லாபகரமாகப் பிரித்தெடுத்து உலகச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கும் இடையே புவியியல், பொருளாதாரத் தடைகள் உள்ளன. துருக்கியின் கனிம வாய்ப்புகளை மதிப்பிடும்போது இந்த இடைவெளியைக் கவனத்தில் கொள்ள வேண்டியதையே புதிய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

முந்தைய செய்தி
எகிறிய காஸ் சிலிண்டர் விலை - விறகு அடுப்புக்கு திரும்பும் மக்கள்!
அடுத்த செய்தி
கிரெடிட் கார்டு கடன் நிலுவைகள் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்