Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

4.26 கோடி பேரல் கச்சா எண்ணெயை ரிலீஸ் செய்த ஐரோப்பிய நாடுகள்

4.26 கோடி பேரல் கச்சா எண்ணெயை ரிலீஸ் செய்த ஐரோப்பிய நாடுகள்

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், லாட்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்கின்றன.

பகிரவும் WhatsApp Facebook

உலகளாவிய எரிபொருள் விநியோக நெருக்கடியைக் குறைக்கவும், எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் 12 ஐரோப்பிய நாடுகள் தங்களது அவசரகால எண்ணெய் கையிருப்பில் இருந்து 4.26 கோடி பேரல்களை வெளியிட முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஆணையர் டான் யோர்கென்சன் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். லக்சம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

இதன்படி, 2027-ம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் இந்த எண்ணெய் கையிருப்பு சந்தைக்கு கொண்டுவரப்படும். இதில் 2.05 கோடி பேரல்கள் டீசலாக இருக்கும். மொத்த அளவில் கிட்டத்தட்ட பாதி டீசலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்கின்றன.

ஏற்கெனவே, ஜி7 நாடுகள் 10 கோடி பேரல் எண்ணெய் மற்றும் டீசலை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய கிழக்குப் போர் காரணமாக ஏற்பட்ட விநியோகப் பாதிப்பும், எரிபொருள் விலை உயர்வும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாகும்.

முந்தைய செய்தி
பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி ரத்து; டீசலுக்கு வரி ரூ.11.50-ஆக உயர்வு
அடுத்த செய்தி
ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ரஷ்யா துணை நிற்கும்: புதின்

தொடர்புடைய செய்திகள்