Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நைஜீரியாவில் இருவருக்கு எபோலா தொற்று? சுகாதார அதிகாரிகள் தீவிர விசாரணை

நைஜீரியாவில் இருவருக்கு எபோலா தொற்று?  சுகாதார அதிகாரிகள் தீவிர விசாரணை

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் இருவருக்கு எபோலா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் இருவருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியாவில் முதல்முறையாக எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் இருவருக்கு எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


இதுகுறித்து நைஜீரியா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (NCDC) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் இருவருக்கு எபோலா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பட்டியலிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆய்வகப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இருவரும் எபோலா தொற்று சந்தேகத்துக்குரியவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதால், அவர்களுக்குத் தொற்று உறுதியாகிவிட்டதாகக் கருதக்கூடாது. ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நைஜீரியாவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட 5-வது நாடாக நைஜீரியா மாறியது. உகாண்டாவிலிருந்து நைஜீரியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான அவரது கணவரும் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முந்தைய செய்தி
Tourists return to Kumbakkarai Falls
அடுத்த செய்தி
DMK stages protest over women's safety

தொடர்புடைய செய்திகள்