Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ரஷ்யா துணை நிற்கும்: புதின்

ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ரஷ்யா துணை நிற்கும்: புதின்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு தானியங்கள், உரங்கள் வழங்கவும், போக்குவரத்து மற்றும் வேளாண் கட்டமைப்புத் திட்டங்களில் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறோம்.

பகிரவும் WhatsApp Facebook

ஆப்பிரிக்க நாடுகளைச் சுரண்டி புதிய காலனித்துவ ஆதிக்கத்தை உருவாக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற மூன்றாவது ரஷ்யா - ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஆப்பிரிக்கத் தலைவர்களிடையே புதின் பேசியதாவது: 

மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களைத் தொடர்ந்து சுரண்டி வருகின்றன. கடன் சுமையை அதிகரித்து, அந்த நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. ஆனால், ரஷ்யா அத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை.

ஆப்பிரிக்க நாடுகளில் மூலப்பொருள்களை அப்படியே வாங்குவதற்குப் பதிலாக, அவற்றை உள்ளூரிலேயே பதப்படுத்தும் தொழில்களை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ரஷ்யா விரும்புகிறது.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு தானியங்கள், உரங்கள் வழங்கவும், போக்குவரத்து மற்றும் வேளாண் கட்டமைப்புத் திட்டங்களில் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார். 48 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

முந்தைய செய்தி
4.26 கோடி பேரல் கச்சா எண்ணெயை ரிலீஸ் செய்த ஐரோப்பிய நாடுகள்
அடுத்த செய்தி
டிஜிட்டல் பணத்துக்கு வலைவிரிக்கும் சைபர் கொள்ளையர்கள்

தொடர்புடைய செய்திகள்