Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெரிய நெருக்கடியை சமாளிக்கத் தயாராகுங்கள் - பிரான்ஸ் அரசு அறிவுறுத்தல்

பெரிய நெருக்கடியை சமாளிக்கத் தயாராகுங்கள் - பிரான்ஸ் அரசு அறிவுறுத்தல்

அத்தியாவசியப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது பிரான்ஸ் அரசும் தனது நாட்டு மக்களைப் பெரிய அளவிலான

அவசரநிலைகளைச் சமாளிக்கத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, குறைந்தது 72 மணி நேரத்திற்குத்
தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.


பெரிய அளவிலான பேரிடர் ஒன்று நிகழ்ந்தால், அதற்குப் பிறகு வரும் முதல் 72 மணி நேரம் மிகவும் கடினமானதாக இருக்கலாம் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, மின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் அல்லது சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும்போது, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் முடங்கிவிடும் அபாயம் உள்ளது.
இந்த அறிவுறுத்தல் ஏதோ ஒரு குறிப்பிட்ட பேரிடரை மட்டும் கருத்தில் கொண்டு வெளியிடப்படவில்லை.

 மாறாக, வெள்ளம், புயல், காட்டுத்தீ, நிலநடுக்கம், தொழிற்சாலை விபத்துகள், தொற்றுநோய்கள், இணையவழித் தாக்குதல்கள் மற்றும் முக்கிய சேவை வலையமைப்புகளில் ஏற்படும் பெரிய அளவிலான தடைகள் எனப் பல்வேறு ஆபத்துகளையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஒரு பேரிடர் ஏற்பட்டவுடன் அனைத்துச் சேவைகளும் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடாது. மீட்புப் பணிகள்
தொடங்குவதற்கும், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் சீராகுவதற்கும், போக்குவரத்து மீண்டும் இயங்குவதற்கும் நேரம்
தேவைப்படலாம். அந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைத் தாங்களே சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அறிவுறுத்தலின் முக்கிய நோக்கம்.


மக்கள் தயாராக வைத்திருக்க வேண்டியவை

  • பேட்டரியில் இயங்கும் வானொலி
  • மொபைல் போனுக்கான சார்ஜர்
  • அத்தியாவசிய மருந்துகள்
  • முதலுதவிப் பெட்டி
  • நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் உணவுகள்
  • சமைக்கத் தேவையில்லாத உணவுப் பொருட்கள்
  • டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்
  • ஒவ்வொருவருக்கும் 6 லிட்டர் குடிநீரை பாட்டில்களில்
  • வைத்திருக்க வேண்டும்.
  • குளிரிலிருந்து பாதுகாக்கும் வெதுவெதுப்பான உடைகள்
  • உயிர் பாதுகாப்பிற்கான வெப்பத்தைத் தக்கவைக்கும் போர்வை
  • கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய டார்ச் லைட்
  • லைட்டர் அல்லது தீப்பெட்டி

முந்தைய செய்தி
Festive demand, public capex to support industrial activity in H2 FY27: UBI
அடுத்த செய்தி
சாதிய அடிப்படையில் மயானங்கள்? - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தொடர்புடைய செய்திகள்