Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காட்டுத் தீயால் சேதமாகும் பழமையான குகை ஓவியங்கள்

காட்டுத் தீயால் சேதமாகும் பழமையான குகை ஓவியங்கள்

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள தெற்கு சுலவேசி மாகாணத்தின் மரோஸ்-பாங்கேப் பகுதியில் உலகின் மிகப் பழமையான குகை ஓவியங்கள் உள்ளன

பகிரவும் WhatsApp Facebook

இந்தோனேஷியாவில் பல மாதங்களாக பரவும் காட்டுத் தீயால், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தீயில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள தெற்கு சுலவேசி மாகாணத்தின் மரோஸ்-பாங்கேப் பகுதியில் உலகின் மிகப் பழமையான குகை ஓவியங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு குகையில் மனித உருவங்கள், பன்றியுடன் இருப்பது போன்ற ஓவியம் உள்ளது. இது குறைந்தது 51,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல, அருகில் உள்ள முனா தீவில் காணப்படும் கை அச்சு ஓவியம் 67,800 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது காட்டுத் தீ இந்த ஓவியங்களுக்கு மிக அருகில் பரவியுள்ளது. செப்டம்பர் 30 முதல் பற்றி எரியும் காட்டுத்தீயால் அப்பகுதியில் உள்ள தேசியப் பூங்காவில் 270 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சாம்பலாகியுள்ளது. தீயின் வெப்பமும், புகையால் படியும் கரித்தூளும் ஓவியங்களைச் சேதப்படுத்தக் கூடும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் பெய்யத் தொடங்கியுள்ள மழை, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும், நச்சுப் புகை மூட்டத்தைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பரில் மழை அதிகரிக்கவும், டிசம்பரில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் சிங்கப்பூர், மலேசியாவில் காற்றின் தரம் மேம்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


முந்தைய செய்தி
சிரியாவில் வெள்ளப் பெருக்கு: 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி
Iran-US draft seeks uranium transfer, Hormuz reopening in 7 days

தொடர்புடைய செய்திகள்