Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சூறாவளியில் தூக்கி வீசப்பட்ட நபர் - மின் கம்பத்தை பிடித்து உயிர் தப்பிய அதிசயம்!

சூறாவளியில் தூக்கி வீசப்பட்ட நபர் - மின் கம்பத்தை பிடித்து உயிர் தப்பிய அதிசயம்!

புயல் காரணமாக ஆரம்பத்தில் 2.88 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தைவானில் சாம்பி புயலில் சிக்கிய நபர் ஒருவர், காற்றில் தூக்கிவீசப்பட்டபோது அவர் தெருவிளக்குக் கம்பத்தை இறுகப் பிடித்துக்கொண்டு உயிர் தப்ப முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

சாம்பி புயல் காரணமாக தைவான் முழுவதும் கனமழையும் சூறாவளிக் காற்றும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. சில பகுதிகளில் மணிக்கு 227 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்ததுடன், பல பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.


புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 527 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு தைவானில் உள்ள லியூகியூ தீவில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆண் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் மின்சார வாரியமான தைபவர் வெளியிட்ட தகவலின்படி, புயல் காரணமாக ஆரம்பத்தில் 2.88 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

 பின்னர் பல வீடுகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்ட போதிலும், சுமார் 56,000 வீடுகளில் தொடர்ந்து மின்சாரம் இல்லாத நிலை நீடிக்கிறது. சேதமடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்பாதைகளைச் சீரமைக்கும் பணிகளில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


புயலின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அரசு சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தைவான் முழுவதும் போக்குவரத்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை சுமார் 1,000 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை 259 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில்தான் புயலில் சிக்கிய நபர் ஒருவர் தெருவிளக்குக் கம்பத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகியுள்ளது. அக்டோபர் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை, தைபே நகரின் ஷிலின் மாவட்டத்தில் உள்ள சீன கலாசாரப் பல்கலைக்கழகம் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அந்த வீடியோவில் அந்த நபர் காற்றில் சிக்கி தெருவிளக்கு கம்பத்தை இறுகப் பிடித்துக்கொண்டு அலறுவதை கேட்க முடிகிறது. ஒரு கட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால், அவரது கால்கள் தரையிலிருந்து மேலே தூக்கப்படுகின்றன. அந்த நபர் யார் என்பது குறித்தோ, அவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

முந்தைய செய்தி
Cultivation of large cardamom emerges as lucrative option
அடுத்த செய்தி
Private capex pipeline grows fourfold since 2014: Report

தொடர்புடைய செய்திகள்