Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சலுகை விலையில் பெட்ரோல் விற்பனை - எங்கு தெரியுமா?

சலுகை விலையில் பெட்ரோல் விற்பனை - எங்கு தெரியுமா?

30 நாட்களுக்கு பெட்ரோல் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்

பகிரவும் WhatsApp Facebook

நைஜீரிய தேசிய பெட்ரோலிய நிறுவனத்தின் (என்என்பிசிஎல்) விற்பனை நிலையங்களில் 30 நாட்களுக்கு பெட்ரோல் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்குவோருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

நைஜீரிய நிதி அமைச்சரும், பொருளாதார ஒருங்கிணைப்பு அமைச்சருமான தைவோ ஒயெடெலே, தலைநகர் அபுஜாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பெட்ரோல் விலை மற்றும் மானியம் தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.


இந்த நடவடிக்கை, பெட்ரோல் மானியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அமையாது என்று அவர் தெரிவித்தார். தகுதியுள்ள பயனாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் அடக்க விலையில் பெட்ரோல் விற்பனை செய்ய என்என்பிசிஎல் நிறுவனத்தை அரசு அனுமதிக்கும், என்றார்.


நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள என்என்பிசிஎல் நிலையங்களில் பெட்ரோல் விலை மாறுபடும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தைய விலைப் பட்டியலின்படி, லாகோஸ் மற்றும் ரிவர்ஸ் பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1,355 நைராவுக்கும், அபுஜாவில் 1,370 நைராவுக்கும் விற்கப்படுகிறது.


முதற்கட்டமாக 30 நாட்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படவுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்குவோர் சலுகையைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலுகையின் அளவு, பயனாளிகளுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தகவல் வெளியாகவில்லை.

முந்தைய செய்தி
வைட்டமின் கே மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல்
அடுத்த செய்தி
Fusion CX ஐபிஓ 14-ம் தேதி தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்