Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அவசரகால கட்டத்தில் எண்ணெய் கையிருப்பு - எச்சரிக்கை!

அவசரகால கட்டத்தில் எண்ணெய் கையிருப்பு - எச்சரிக்கை!

நிறுவனங்களின் வணிகக் கையிருப்பு 600 கோடி பீப்பாய்க்கும் குறைவாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உலகில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெயில் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவையே உடனடியாகப் பயன்படுத்த முடியும் என்று சவுதி அராம்கோ தலைமைச் செயல் அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார். முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தடைகள் நீடிப்பதால், எண்ணெய் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


லண்டனில் நடைபெற்ற ‘எனர்ஜி இன்டெலிஜென்ஸ்’ மாநாட்டில் பேசிய நாசர், ‘‘தற்போதைய நெருக்கடி தொடங்கியபோது உலகில் சுமார் 1,000 கோடி பீப்பாய் எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது நிறுவனங்களின் வணிகக் கையிருப்பு 600 கோடி பீப்பாய்க்கும் குறைவாக உள்ளது. அதிலும் பெரும்பகுதியை உடனடியாகச் சந்தைக்கு வழங்க முடியாது.

 
மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 300 கோடி பீப்பாய் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க, சேமிப்பிலிருந்து சுமார் 100 கோடி பீப்பாய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி நிறுவனங்களின் கையிருப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டாலும், பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் சேமித்து பழைய கையிருப்பு நிலையை அடைய இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அன்றாடத் தேவைக்கான எண்ணெயை வழங்கிக்கொண்டே சேமிப்பையும் அதிகரிக்க வேண்டியிருப்பதே இதற்குக் காரணம்.


இதற்கிடையே, முக்கிய பொருளாதார நாடுகள் அவசர சேமிப்பிலிருந்து 10 கோடி பீப்பாய் எண்ணெய் மற்றும் டீசலை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. இது தற்காலிகமாக உதவினாலும், விநியோகப் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது. கச்சா எண்ணெயைவிட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

 வளைகுடா நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன. இருப்பினும், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த அச்சம் நீடிக்கிறது. கடந்த மாதத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்குச் சுமார் 100 டாலராக இருந்தது. விநியோகத்தைத் தொடர அராம்கோ புதிய ஏற்றுமதிப் பாதைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. யான்பு, சிடி கெரிர், போர்ட் சயீத் வழியாக ஏற்றுமதி தொடர்கிறது.


தேவைப்பட்டால் சில நாட்களுக்குள் தினமும் 1.2 கோடி பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறனைப் பயன்படுத்த முடியும். தேவைக்கேற்ப உற்பத்தியை மாற்றியமைக்க முடியும். தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனத்திடம் போதுமான கையிருப்பு உள்ளது, ’’ என்றார்.

முந்தைய செய்தி
Steel consumption to grow 7-8%: Tata Steel CEO
அடுத்த செய்தி
குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு!

தொடர்புடைய செய்திகள்