Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விளக்கொளியில் மின்னும் 'லிட்டில் இந்தியா'

விளக்கொளியில் மின்னும் 'லிட்டில் இந்தியா'

பிரம்மாண்டமான ஒளி அலங்காரங்கள் மற்றும் கலைப்படைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிங்கப்பூரின் புகழ்பெற்ற 'லிட்டில் இந்தியா' பகுதி வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலித்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் எங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்போது தீபாவளிப் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால், அங்குள்ள தெருக்களில் பிரம்மாண்டமான ஒளி அலங்காரங்கள் மற்றும் கலைப்படைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


 லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகளில் தீபாவளிக்கான பாரம்பரிய உடைகள், நகைகள், அகல் விளக்குகள் மற்றும் சுவையான பலகாரங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இங்கு திரண்டு வந்து உற்சாகத்துடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.


சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் சுமார் 10 சதவீதம் பேர் வசிக்கின்றனர். சீனர்கள் மற்றும் மலாய் மக்களுக்கு அடுத்தபடியாக, இந்தியர்கள் அங்கு 3-வது பெரிய சமூகமாக திகழ்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் அங்கு தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், லிட்டில் இந்தியா பகுதி முழுமையாக விழாக்கோலம் பூண்டுள்ளது.

முந்தைய செய்தி
Leopard videos spark fear among residents
அடுத்த செய்தி
எச்சரிக்கை தேவை - சர்வதேச அளவில் சர்வர்களில் பாதுகாப்பு குறைபாடு

தொடர்புடைய செய்திகள்