Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரிட்டன் பிரதமர்

தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரிட்டன் பிரதமர்
லண்டனில் உள்ள பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில் விளக்கேற்றிவைத்த பிரதமர் ஆண்டி பரன்ஹாம் மற்றும் அவரது மனைவி மேரி பிரான்ஸ் வேன் ஹீல்.

பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தனது மனைவியுடன் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார்.

பகிரவும் WhatsApp Facebook

பிரிட்டன் பிரதமர் இல்லமான '10 டவுனிங் தெருவில்' தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்க வந்த இந்திய சமூகத்தினரை, பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மற்றும் அவரது மனைவி மேரி பிரான்ஸ் வேன் ஹீல் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் வண்ணமயமான விளக்குகள், பாரம்பரிய அகல் விளக்குகள் மற்றும் நறுமணம் வீசும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது.

 
பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தனது மனைவியுடன் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், பிரிட்டிஷ்-இந்திய சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

 
பிரபுக்கள் அவையின் உறுப்பினர்களான பேரோனஸ் நீனா கில் மற்றும் லார்ட் உதய் நாகராஜு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் பேசும்போது, "உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். 

பிரிட்டனின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் இந்திய வம்சாவளியினர் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பு பெரிது. பிரிட்டன்-இந்தியா இடையிலான இருதரப்பு உறவையும் நட்பையும் மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

 
பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம், பிரிட்டனில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



முந்தைய செய்தி
Jupiter Wagons bags ₹1,140-crore railway order
அடுத்த செய்தி
கடலுக்கு அடியில் 28 லட்சம் விலாங்கு மீன்கள்: விஞ்ஞானிகளையே வியக்க வைத்த அதிசயம்

தொடர்புடைய செய்திகள்