Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிவு

டாலருக்கு  நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 13 காசுகள் சரிந்தது.

பகிரவும் WhatsApp Facebook

உலகளவில் அரசியல் பதற்றங்கள் அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 13 காசுகள் சரிந்தது. வர்த்தக முடிவில் தற்காலிக நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96.88-ஆக இருந்தது.

டாலர் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு குறைய காரணமாக இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி தலையிட்டிருக்கலாம் என்றும், அது ரூபாய் மேலும் சரிவதைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.


ரூபாய் வர்த்தகம் நேற்று 96.71 என்ற நிலையில் தொடங்கியது. முந்தைய நாளான புதன்கிழமை ஒரு டாலருக்கு ரூ.96.75 என்ற நிலையில் வர்த்தகம் முடிந்திருந்தது.
உலகளாவிய பதற்றங்கள் தொடர்வதால் ரூபாய் மதிப்பு மேலும் அழுத்தத்தைச் சந்திக்கலாம் என்று மிரே அசெட் ஷேர்கான் ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி தெரிவித்தார். 

ரூபாய் சரியான மதிப்பை அடையவும், அதிக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுவோம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று முன்தினம் கூறியது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜயை சந்தித்த கடற்படைத் தலைவர்
அடுத்த செய்தி
Heavy rainfall disrupts drinking water supply

தொடர்புடைய செய்திகள்