Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வலியுறுத்தல்

சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வலியுறுத்தல்

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 கோடி டன் வரை சமையல் எண்ணெய் தேவைப்படும் நிலையில், சுமார் 1.6 கோடி டன் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் மலேசியா, இந்தோனேஷியா நாடுகளில் இருந்து பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் கொப்பரை கிலோ ரூ.220-லிருந்து ரூ.154-ஆக குறைந்துள்ளது. ஒரு டன் கொப்பரையின் விலை ரூ.72,000-லிருந்து ரூ.54,000-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 2.3 கோடி முதல் 2.5 கோடி டன் வரை சமையல் எண்ணெய் தேவைப்படும் நிலையில், சுமார் 1.5 கோடி முதல் 1.6 கோடி டன் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பதுடன், உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தமிழகத்தில் முதல் ஆலை தொடங்கிய ‘ஓம்ரான்’ நிறுவனம்
அடுத்த செய்தி
TASMAC set for cashless payments

தொடர்புடைய செய்திகள்