Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குறையும் பூட்டு விற்பனை! ரூ.16.50 கோடிக்கு வர்த்தகமாகும் திண்டுக்கல் பூட்டு

குறையும் பூட்டு விற்பனை! ரூ.16.50 கோடிக்கு வர்த்தகமாகும் திண்டுக்கல் பூட்டு
திண்டுக்கலில் பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

நடுத்தர மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் ரூ.400 முதல் ரூ.1,500 வரையிலான விலைகளில் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு வகைகள் ஆண்டுக்கு ரூ.16.50 கோடி அளவுக்கு விற்பனையாகின்றன.

கடந்த 18-ம் நூற்றாண்டில் திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் அங்கிருந்த பெட்டகங்களை பாதுகாக்க இரும்புத் தகடுகள், பித்தளைத் தகடுகள் மற்றும் சிறப்பு நெம்புகோல்களை கொண்டு முழுமையாகக் கைகளால் பூட்டுகள் தயாரிக்கும் தொழில் தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கிய பூட்டுத் தயாரிப்புத் தொழில் காலம்காலமாக தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திண்டுக்கல் பூட்டுகளின் பாரம்பரியம் மற்றும் தனித்தன்மைக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் 2019-ல் மத்திய அரசின் புவியியல்சார் குறியீடும் வழங்கப்பட்டது. இயந்திரங்களால் செய்யப்படும் குறைந்த விலை அலிகார் மற்றும் சீனப் பூட்டுகளின் வருகையாலும், நவீன தொழில்நுட்ப மாற்றங்களாலும் இந்த தொழில் சவால்களைச் சந்தித்து வந்தாலும் தரம் குறையாமல் கைகளில் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டின் மவுசு இன்றும் குறையாமல் இருந்து வருகிறது.

சுமார் 50 ஆண்டுகளாக முழுமையாக கைகளில் பூட்டு தயாரித்து வரும் ஏஎம் பூட்டு தயாரிப்பாளர் முருகேசன் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் 500-க்கும் மேற்பட்ட பூட்டு தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. தற்போது 50 நிறுவனங்கள்கூட இல்லை. நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் குறைந்த விலை பூட்டுகள் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றன. அவற்றுடன் போட்டிபோட முடியாமல் பூட்டுத் தொழில் மெல்ல மெல்ல பாதிப்பை சந்தித்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து இயந்திரத்தால் தயாரிக்கப்படும் பூட்டுகள் வந்தாலும், கைகளில் தயாரிக்கும் எங்களது திண்டுக்கல் பூட்டுகளுடன் தரத்திலும், பாதுகாப்பிலும் போட்டிபோட முடியாது. அதனால்தான் தற்போது வரை திண்டுக்கல் பூட்டுக்கு மவுசு குறையாமல் உள்ளது.

நடுத்தர மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் ரூ.400 முதல் ரூ.1,500 வரையிலான விலைகளில் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண பூட்டுகள் ஆண்டுக்கு ரூ.15 கோடி வரையும், கோயில் பூட்டு மற்றும் முதல் தர பூட்டுகள் ரூ.1.50 கோடி வரையும் விற்பனையாகின்றன. எனினும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூட்டு விற்பனை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது.

பூட்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மதுரை மற்றும் திண்டுக்கல்லில் எளிதாக கிடைக்கிறது என்பதால், எந்த சிரமமும் இல்லாமல் தொழில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

120 வகையான பூட்டுகள்:

மாங்காய் பூட்டு, கொலைகாரன் பூட்டு, சாவிபிடி பூட்டு என 120-க்கும் மேற்பட்ட வகைகளில் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. தவறான சாவியை நுழைத்தால் உள்ளே கத்தி போன்ற அமைப்பு வெளிவரும் வகையில் கொலைகாரன் பூட்டு உருவாக்கப்படுகிறது. 8 இன்ச் முதல் 36 அங்குலம் வரை தேவைக்கேற்ப பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் பூட்டுகள் தயார் செய்யப்படுகின்றந. அளவைப் பொறுத்து விலை ரூ.3,500 முதல் ரூ.2 லட்சம் வரை இவை விற்கப்படுகின்றன.

சந்தைகளில் கைரேகை பூட்டு, கார்டு (அட்டை) பூட்டு, ஸ்கேனிங் பூட்டு என நவீனத் தொழில்நுட்பத்திலான பூட்டுகள் இருந்தாலும், கைகளால் தயாரிக்கும் ரிவர்ஸ் டைப் கோட்டிங் முறையில் உருவாகும் திண்டுக்கல் போட்டுக்கு இணை இல்லை. இந்த பூட்டின் லிவர்ஸ் கோட்டிங் 3 முதல் 9 அங்குலம் வரை இருக்கும். ஆனால், விலை குறைவான நவீனப் பூட்டுகளின் லாக் அரை அங்குலம் முதல் முக்கால் அங்கும் மட்டுமே இருக்கும். கள்ளச் சாவி போட்டு திறக்க முடியாத அளவுக்கு லாக்கின் தரம் இருக்கும்.



முந்தைய செய்தி
State-level outreach to help MSMEs
அடுத்த செய்தி
Core sector growth accelerates to 7.9%

தொடர்புடைய செய்திகள்