Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நியூசிலாந்துக்கு பின்னலாடை ஏற்றுமதி 3 மடங்கு உயர வாய்ப்பு

நியூசிலாந்துக்கு பின்னலாடை ஏற்றுமதி 3 மடங்கு உயர வாய்ப்பு

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியா – நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், அந்நாட்டுக்கு திருப்பூரில் இருந்து மேற்கொள்ளப்படும் பின்னலாடை ஏற்றுமதி அடுத்த 3 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலாளர் திருகுமரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் திருப்பூரின் பங்களிப்பு 60 சதவீதமாகும். அதாவது, ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு முன்பு 5 முதல் 10 சதவீதம் வரை இருந்த இறக்குமதி வரி தற்போது பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் ஏற்றுமதி 3 மடங்கு உயர வாய்ப்புள்ளது. வரிச் சலுகையால் மற்ற நாடுகளைவிட இந்தியாவிலிருந்து 5 முதல் 10 சதவீதம் குறைவான விலையில் பொருள்களை வாங்க முடியும். இதனால் ஆர்டர்கள் அதிகரிக்கலாம். பணரீதியான லாபத்தைவிட தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பே அதிகம். நியூசிலாந்து சிறிய நாடு என்பதால் 500 முதல் 1,000 எண்ணிக்கையிலான சிறிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள் அதிகம் பயனடையலாம் என்றார்.

ஏற்றுமதி இரட்டிப்பாகும்:

சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், "55 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தின் ஆயத்த ஆடை இறக்குமதி ஆண்டுக்கு ரூ.10,500 கோடியாக உள்ளது. சீனா, வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. 

ஏற்கெனவே இந்நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் உள்ளதால், புதிய ஒப்பந்தத்தால் உடனடியாகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், இந்தியப் பருத்தியின் தரம் காரணமாக நியூசிலாந்து வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டலாம். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் வர்த்தகம் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது" என்றார்.

முந்தைய செய்தி
ஐபிஓ-க்கு தயாராகும் இந்திய ஏஐ நிறுவனங்கள்
அடுத்த செய்தி
Education loan camp in Tiruppur

தொடர்புடைய செய்திகள்