Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

110 ரோபோக்களின் `குரூப் டான்ஸ்' - சீனாவில் கின்னஸ் உலக சாதனை

110 ரோபோக்களின் `குரூப் டான்ஸ்' - சீனாவில் கின்னஸ் உலக சாதனை

ஐந்து நிமிடங்கள் 43 விநாடிகள் நீடித்த நிகழ்ச்சியில், ரோபோக்கள் ஒரே தாளத்தில் அசைந்ததுடன், குதித்தல், சாகச அசைவுகள், அணிவகுப்பு மாற்றங்களையும் மேற்கொண்டன

பகிரவும் WhatsApp Facebook

சீனாவில் 110 மனித உருவ ரோபோக்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளன.

ஷான்டாங் மாகாணத்தின் ஜினான் நகரில் அக்டோபர் 24 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அகிபாட் நிறுவனத்தின் ‘எக்ஸ்பெடிஷன் ஏ3’ ரோபோக்கள் பங்கேற்றன. மஞ்சள் நதி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ஐந்து நிமிடங்கள் 43 விநாடிகள் நீடித்த நிகழ்ச்சியில், ரோபோக்கள் ஒரே தாளத்தில் அசைந்ததுடன், குதித்தல், சாகச அசைவுகள், அணிவகுப்பு மாற்றங்களையும் மேற்கொண்டன. நேரில் கண்காணித்த கின்னஸ் பிரதிநிதி, 110 ரோபோக்களின் பங்கேற்பை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கினார்.

இதற்காக ‘லிங்க்பாட்ஸ்’ குழுக் கட்டுப்பாட்டு அமைப்பும், ரோபோக்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டன. இவை ஒவ்வொரு ரோபோவின் நகர்வையும் ஒருங்கிணைத்து, ஒன்றுடன் ஒன்று மோதாமல் செயல்பட உதவியதாக நிறுவனம் தெரிவித்தது.
பங்கேற்ற அனைத்தும் வழக்கமான ரோபோக்கள் என்றும், நிகழ்ச்சிக்காகத் தனிப்பட்ட முறையில் மாற்றியமைக்கப்பட்டவை அல்ல என்றும் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வாங் சுவாங் கூறினார்.

நடனத்தைத் தொடர்ந்து, இந்த ரோபோக்கள் சுற்றுலா நிகழ்ச்சிகள், பொதுச் சேவைகள், கண்காட்சிகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. அதிக எண்ணிக்கையிலான ரோபோக்களை ஒருங்கிணைத்து இயக்கும் திறனைச் சோதிக்கும் முயற்சியாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Avalpoondurai lake set to become tourist site
அடுத்த செய்தி
Trump says Libya cannot be illegal migration corridor

தொடர்புடைய செய்திகள்