Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எழுத்தாளருக்கு ஆண்டுக்கு ரூ.3.25 கோடி சம்பளம்! ஏஐநிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

எழுத்தாளருக்கு ஆண்டுக்கு ரூ.3.25 கோடி சம்பளம்! ஏஐநிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவால் எழுத்துப் பணிகள் மாறிவரும் நிலையில், கிளாட் செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், ஒரு எழுத்தாளரைப் பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.3.25 கோடி வரை சம்பளம் வழங்க முன்வந்துள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான ‘நிர்வாகத் தகவல்தொடர்பு எழுத்தாளர்’ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆண்டு சம்பளம் 2.95 லட்சம் முதல் 3.45 லட்சம் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.2.78 கோடி முதல் ரூ.3.25 கோடி வரையாகும்.
விண்ணப்பதாரர்களுக்கு உயர்நிலைப் பணிகளில் 8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் தேவை. நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுக்கான தகவல்தொடர்பு உள்ளடக்கங்களை வடிவமைப்பது முக்கியப் பொறுப்பாகும்.

மேலும், வெளிப்புறத் தகவல் தொடர்புக் குழுவினருடனும், துறை சார் நிபுணர்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு நிறுவனமே மனித எழுத்தாளருக்கு இவ்வளவு உயர்ந்த சம்பளத்தை அறிவித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் அனுபவமிக்க எழுத்தாளர்களின் திறனுக்கு நிறுவனங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

முந்தைய செய்தி
கோழியின நோய் ஆராய்ச்சி கூடத்தில் அமைச்சர் ஆய்வு
அடுத்த செய்தி
ஸ்டார்லிங்க் இணைய சேவையில் புதிய கட்டுப்பாடு: உக்ரைனுக்கு வந்த சோதனை!

தொடர்புடைய செய்திகள்