Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காட்டில் புதைந்த தங்க கனவு - நூதன முதலீட்டு மோசடி!

காட்டில் புதைந்த தங்க கனவு - நூதன முதலீட்டு மோசடி!

ஆசை காட்டி மோசம் செய்த கும்பல்

பகிரவும் WhatsApp Facebook

தங்கம் வாங்குங்கள்; காட்டில் மறைத்து வையுங்கள்; விலை உயரும்போது நல்ல லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி, வாங்கிய தங்கத்தையே பறிகொடுத்துள்ளனர் நார்வேயைச் சேர்ந்த சிலர். இந்த நூதன முதலீட்டு மோசடி குறித்து அந்நாட்டு வங்கிகள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அணுகுவதிலிருந்து மோசடி தொடங்குகிறது. அவர்களைத் தங்கம் வாங்க வைக்கும் கும்பல், அடுத்து ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்குகிறது. வாங்கிய தங்கத்தை காட்டுக்குக் கொண்டுசென்று மறைத்து வைக்க வேண்டும் என்பதுதான் அது.
“அங்கே தங்கத்தைப் பாதுகாக்க ஆட்கள் இருக்கிறார்கள். அதன் மதிப்பு உயரும்வரை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறி நம்பவைக்கின்றனர். தங்கமும் பாதுகாப்பாக இருக்கும், பின்னாளில் லாபமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சிலர் இதற்குச் சம்மதித்துள்ளனர்.


ஆனால், தங்கத்தைக் காட்டில் வைத்துவிட்டுத் திரும்பியதும், மோசடிக் கும்பல் அதை எடுத்துச் சென்றுவிடுகிறது. விலை உயரக் காத்திருந்தவர்களுக்கு, முதலீடாக வாங்கிய தங்கமே காணாமல் போனதுதான் மிச்சம்.
பல வங்கி வாடிக்கையாளர்கள், இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக நார்வே வங்கித் துறையின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற முதலீட்டு மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், மக்களை எச்சரிக்கும் பணியில் வங்கிகள் இறங்கியுள்ளன.


இந்த மோசடியில் மக்களை ஈர்த்தது தங்கத்தின் மீதான நம்பிக்கை. அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கும்பல், பாதுகாப்பு என்ற பெயரில் தங்கத்தை உரிமையாளர்களிடமிருந்து அபகரித்துள்ளது. தங்கம் வாங்கியவர்களே அதை மறைவான இடத்துக்குக் கொண்டுசென்று வைத்ததால், திருடுவதற்கான வாய்ப்பையும் அவர்களைக் கொண்டே உருவாக்கியுள்ளது.


வாங்கியது உண்மையான தங்கம்தான். ஆனால், அதைப் பாதுகாப்பதாகச் சொன்ன வாக்குறுதிதான் போலி. தங்கத்தின் விலை ஏறினால் சேமிப்பு பெருகும் என்று நினைத்தவர்கள், கடைசியில் தங்கள் சேமிப்பையே இழந்துள்ளனர்.
லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொடங்கிய பயணம், காட்டில் தங்கத்தை வைத்துவிட்டுத் திரும்பியதோடு முடிந்துவிட்டது. அவர்களுக்குக் காத்திருந்தது முதலீட்டின் பலன் அல்ல; ஏமாற்றம். பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி ஒப்படைத்த இடமே, தங்கம் பறிபோன இடமாக மாறியதுதான் இந்தச் சம்பவத்தின் வேதனை.

முந்தைய செய்தி
இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான் - என்ன பாதிப்பு?
அடுத்த செய்தி
இணைய தளங்கள் முடக்கம் - தொழில்நுட்பக் கோளாறா, திட்டமிட்ட தாக்குதலா?

தொடர்புடைய செய்திகள்