Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

தற்போது தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

எளிதில் தீப்பிடிக்கும் மின்னணு சாதனங்கள், மண்எண்ணை உள்ளிட்ட எரிபொருட்கள், வேதிப் பொருட்கள், தீப்பெட்டிகள், பட்டாசு ஆகியவற்றை ரயில்களில் கொண்டு செல்ல தடை உள்ளது. குறிப்பாக தீபாவளி சமயத்தில் ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.


2012ம் ஆண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது ரயிலில் இருந்த பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு ரயில்களில் கொண்டுச் செல்வதை தடுக்க ரயில்வே மேலும் தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மீறி கொண்டுச் செல்பவர்களின் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

----------

இந்திய ரயில்வே சட்டம்(1989), பிரிவுகள் 164, 165ன்படி பட்டாசு உட்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை ரயிலில் கொண்டுச் செல்வது குற்றம். மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
விபத்தில் ரயில்வேக்கு ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளும் சம்பந்தப்பட்ட பயணியிடம் வசூலிக்கப்படும்.

முந்தைய செய்தி
அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
அடுத்த செய்தி
காங்கோவில் எபோலா காய்ச்சலால் 5,000 பேர் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்