Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புற்றுநோயால் உயிரிழந்த நபர் - 8 ஆண்டுகளாக மருத்துவமனையில் காத்திருக்கும் கோழி

புற்றுநோயால் உயிரிழந்த நபர் - 8 ஆண்டுகளாக மருத்துவமனையில் காத்திருக்கும் கோழி

தனது உரிமையாளரை இறுதியாகச் சந்தித்த இடத்திலேயே மார்ட்டின் (கோழி) தொடர்ந்து தங்கியிருக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

புற்றுநோயால் உயிரிழந்த தனது உரிமையாளருக்காக, கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்கும் சேவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொலிவியாவின் சாண்டா குரூஸ் நகரில் உள்ள கிழக்கு பொலிவியா புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்துக்கு தனது உரிமையாளருடன் வந்த சேவலின் பெயர் மார்ட்டின். புற்றுநோய் சிகிச்சைக்காக அங்கு வந்திருந்த அதன் உரிமையாளர், பின்னர் அந்த நோயால் உயிரிழந்தார். ஆனால், அதன் பிறகும் மார்ட்டின் அந்த மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறவில்லை.

தனது உரிமையாளரை இறுதியாகச் சந்தித்த இடத்திலேயே மார்ட்டின் தொடர்ந்து தங்கியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவமனை வளாகத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள மார்ட்டின், அங்குள்ள பகுதிகளில் சுற்றித் திரிவதையும், மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரங்களில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. 

மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும், அங்கு பணிபுரிபவர்களுக்கும் அது நன்கு அறிமுகமான ஒன்றாக மாறியுள்ளது. சில நேரங்களில் உணவு வழங்கும் நபர்களை மார்ட்டின் நெருங்கிச் செல்கிறது. பாப்கார்னை அது விரும்பி உண்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில், தனது உரிமையாளர் உயிரிழந்த பின்னரும் அவர் ரயிலில் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்புடன் நிலையத்தில் காத்திருந்த ஹச்சிகோ நாயின் கதை, விலங்குகளின் விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. அதேபோல, மார்ட்டினின் கதையும் பலரது மனதைத் தொட்டுள்ளது.

அதேநேரத்தில், மார்ட்டின் தனது உரிமையாளரின் வருகைக்காக உணர்வுபூர்வமாகக் காத்திருக்கிறதா அல்லது அந்தச் சூழலுக்குப் பழகிவிட்டதால் அங்கேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக அங்குள்ள செய்தி சேனல்கள் மார்ட்டினின் அன்றாட வாழ்க்கை குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளன.

முந்தைய செய்தி
நவம்பர் 1-ல் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம்
அடுத்த செய்தி
Trump falsely claims US has ‘got’ Greenland, Venezuela

தொடர்புடைய செய்திகள்