Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நவம்பர் 1-ல் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம்

நவம்பர் 1-ல் தமிழகம் முழுவதும்  கிராமசபைக் கூட்டம்

இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 1-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்றும், இக்கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் எக்காரணம் கொண்டும் நடத்தக் கூடாது என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அமுதவல்லி, சென்னை நீங்கலாக மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வரும் நவம்பர் 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஊராட்சி வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி, அன்று காலை 11.00 மணி அளவில் கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு உரிய முறையில் முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்களை எக்காரணம் கொண்டும் மதச்சார்புள்ள எந்தவொரு வழிபாட்டுத் தலங்களிலும் நடத்தக் கூடாது. மேலும், குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்த பின்னரே கூட்டத்தை முறைப்படி தொடங்க வேண்டும்.

இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். மேலும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் வீடு கட்டும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.
கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை 'நம்ம கிராம சபை' என்ற செயலி மூலம் உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டும். இது குறித்த விரிவான அறிக்கையை அன்றே ஊரக வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகளை ஆட்சியர்கள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தங்கக் கடன்களில் அதிகரிக்கும் வாராக் கடன்: ஸ்ரீராம் பைனான்ஸ்
அடுத்த செய்தி
புற்றுநோயால் உயிரிழந்த நபர் - 8 ஆண்டுகளாக மருத்துவமனையில் காத்திருக்கும் கோழி

தொடர்புடைய செய்திகள்