Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நேற்று கே.என்.நேரு; இன்று அவரது சகோதரர்கள் - உயர் நீதிமன்றம் வைத்த செக்

நேற்று கே.என்.நேரு; இன்று அவரது சகோதரர்கள் - உயர் நீதிமன்றம் வைத்த செக்

வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பகிரவும் WhatsApp Facebook

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் டி.கவிபிரசாத், டி.ரமேஷ், ஆர்.நாராயணன் மற்றும் தியாகராஜன் செல்வமணி ஆகியோர் பிப்ரவரி 20ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி, நேருவின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முந்தைய செய்தி
ஏஐ சிப் வாங்க ரூ.3.80 லட்சம் கோடி கடன் திரட்டும் எலான் மஸ்க்
அடுத்த செய்தி
இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் பலோன் டி’ஓர் விருதை வென்று சாதனை

தொடர்புடைய செய்திகள்