Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏஐ சிப் வாங்க ரூ.3.80 லட்சம் கோடி கடன் திரட்டும் எலான் மஸ்க்

ஏஐ சிப் வாங்க ரூ.3.80 லட்சம் கோடி கடன் திரட்டும் எலான் மஸ்க்

ஏஐ கணினி சேவைகளை மட்டும் நம்பியுள்ள நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவுக்கான சிப்களை வாங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 40 பில்லியன் டாலர் நிதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஏஐ கணினி சேவைகளை மட்டும் நம்பியுள்ள நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், அதற்குத் தேவையான கணினி கட்டமைப்புகள் மற்றும் அதிநவீன சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஏஐ செயல்பாடுகளுக்குப் பயன்படும் கிராபிக்ஸ் செயலிகளை (ஜிபியு) வாங்க 40 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.3.80 லட்சம் கோடி கடன் நிதி ஏற்பாட்டை முடித்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.


இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிர்வகிக்கும் நிறுவனம் சிப்கள் மற்றும் சேவையக உபகரணங்களை வாங்கி, ஸ்பேஸ்எக்ஸுக்கு குத்தகைக்கு வழங்கும். இந்த நிதி ஒப்பந்தம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிப்கள் 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் கிடைக்கவுள்ளன.

 
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை மற்றும் ராக்கெட் ஏவுதல் மூலம் கிடைக்கும் வருவாயும், முதலீட்டுக்குத் தகுதியான கடன் மதிப்பீடும் நிதி திரட்ட உதவியதாக மஸ்க் கூறியுள்ளார்.
ஏஐ பணிகளுக்கான கணினித் திறனை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் ‘நியோ கிளவுட்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏஐ தரவு மையங்களைத் தவிர வேறு வழிகளில் கணிசமான வருவாய் இல்லாத நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது கடினமாகி வருவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.


இதனால், 200-க்கும் மேற்பட்ட நியோ கிளவுட் நிறுவனங்களில் பல மூடப்படலாம்; சில நிறுவனங்கள் ஒன்றிணையலாம் என அவர் கணித்துள்ளார். அத்தகைய நிறுவனங்களை ஸ்பேஸ் எக்ஸ் வாங்கும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மஸ்கின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நியோ கிளவுட் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதேநேரம், அவற்றின் சேவைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
தங்கத்தால் மீண்டு வரும் பொருளாதாரம்
அடுத்த செய்தி
நேற்று கே.என்.நேரு; இன்று அவரது சகோதரர்கள் - உயர் நீதிமன்றம் வைத்த செக்

தொடர்புடைய செய்திகள்