Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நேபாளத்தில் கடும் பனிப்பொழிவு: 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயம்

நேபாளத்தில் கடும் பனிப்பொழிவு: 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயம்

மலைக் கணவாய்களில் செல்போன் தொடர்பு வசதி இல்லாததால், மாயமான சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஷே-போக்சுண்டோ நகராட்சித் தலைவர் தவா சாம்டுக் குருங் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

நேபாளத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மலையேறச் சென்ற 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினரும், மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தின் மிக ஆழமான ஏரியான ஷே-போக்சுண்டோ ஏரிக்குச் சென்ற 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள். இந்திய சுற்றுலாப் பயணிகள் டோல்போ புத்தா கிராம நகராட்சியின் 4 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் இருந்து ஷே-போக்சுண்டோ ஏரியை நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.


நும்லா கணவாய் மற்றும் பக்லா கணவாய் பகுதிகளில் அவர்கள் கடைசியாகக் காணப்பட்டதாகவும், கடும் பனிப்பொழிவால் சிக்கி மாயமாகியிருக்கலாம் என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். மலைப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதால், ஆபத்தான கணவாய்கள் வழியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகளை எச்சரித்துள்ளனர். எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் 6 பேரும் தங்களது பயணத்தைத் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டோல்பா மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி ஜுனு ஹமால் கூறுகையில், “டோ பகுதியில் இருந்து போக்சுண்டோ ஏரியை நோக்கித் திரும்பியபோது இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர்” என்றார். மலைக் கணவாய்களில் செல்போன் தொடர்பு வசதி இல்லாததால், மாயமான சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஷே-போக்சுண்டோ நகராட்சித் தலைவர் தவா சாம்டுக் குருங் தெரிவித்தார். 

மாயமான சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிந்து மீட்பதற்காக நேபாள ராணுவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி வரும் அர்னாப் புயலுடன் தொடர்புடைய வானிலை மாற்றங்கள், நேபாளத்தின் உயரமான மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
DMK stages protest over women's safety
அடுத்த செய்தி
Omni buses halt mid-way in protest

தொடர்புடைய செய்திகள்