Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எல் நினோ காலநிலை பாதிப்பு: பொலிவியாவில் அவசரநிலை பிரகடனம்

எல் நினோ காலநிலை பாதிப்பு: பொலிவியாவில் அவசரநிலை பிரகடனம்

வறட்சியைப் போலவே பொலிவியாவில் வெள்ளப்பெருக்கும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்களைச் சமாளிக்க பொலிவியா அரசு நாடு அவசரநிலையை அறிவித்துள்ளது.

பொலிவியா அதிபர் ரோட்ரிகோ பாஸ், அக்டோபர் 31-ம் தேதி இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் 78,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. 75,000-க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை மற்றும் வெள்ளத்தால் கூடுதல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அதிபர் ரோட்ரிகோ பாஸ் கூறுகையில், “எல் நினோ காலநிலை நிகழ்வால் கடும் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள அனைத்து அரசு அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம்” என்றார்.

வறட்சியைப் போலவே பொலிவியாவில் வெள்ளப்பெருக்கும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பரில் அந்நாட்டின் சாண்டா குரூஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல் நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இது பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இந்நிகழ்வின்போது, பசிபிக் பெருங்கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் கடல்நீரின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் உலகம் முழுவதும் காற்றின் இயக்கம், வளிமண்டல அழுத்தம் மற்றும் மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதன் விளைவாகச் சில நாடுகளில் கடும் வறட்சியும், வேறு சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும். எல் நினோ நிகழ்வின் தீவிரமும் அதன் பாதிப்புகளும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் மாறுபடும். எனினும், தற்போதைய எல் நினோ நிகழ்வு இதுவரை பதிவானவற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

2026-ம் ஆண்டின் இறுதியில் எல் நினோ நிகழ்வு உச்சத்தை எட்டும் என்றும், அதன் தாக்கம் 2027-ம் ஆண்டிலும் நீடிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Omni buses halt mid-way in protest
அடுத்த செய்தி
New AI research centre inaugurated at CIT

தொடர்புடைய செய்திகள்