Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உக்ரைனின் ஒலேஷ்கி நகரில் போர் நிறுத்தம் தொடக்கம் - காரணம் என்ன?

உக்ரைனின் ஒலேஷ்கி நகரில் போர் நிறுத்தம் தொடக்கம் - காரணம் என்ன?

நகருக்குள் உணவு, மருந்து, சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை அனுப்பவும், வெளியேற விரும்பும் மக்களுக்குப் பாதுகாப்பான வழி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவிப் பணிகள் இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைனின் ஒலேஷ்கி நகரில், மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பொதுமக்களை வெளியேற்றவும் ஏதுவாக உள்ளூர் போர் நிறுத்தம் இன்று தொடங்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ரஷ்யாவும், உக்ரைனும் இந்தத் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. அக்டோபர் 27 அதிகாலை 3 மணிக்கு அது நடைமுறைக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஒலேஷ்கி, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய முதல் நாளிலேயே ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டது. போருக்கு முன்பு சுமார் 24 ஆயிரம் பேர் வசித்த இந்த நகரில், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

நகருக்குள் உணவு, மருந்து, சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை அனுப்பவும், வெளியேற விரும்பும் மக்களுக்குப் பாதுகாப்பான வழி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவிப் பணிகள் இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின்போது ஒலேஷ்கியின் நிலை குறித்து அறிந்த மெலானியா, இரு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒலேஷ்கியில் போர் நிறுத்தம் தொடங்கியபோதும், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பிற பகுதிகளில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
சீனப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் புதிய கட்டணம்
அடுத்த செய்தி
இந்திய கோகோ கோலா நிறுவனத்தின் ஐபிஓ

தொடர்புடைய செய்திகள்