Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய கோகோ கோலா நிறுவனத்தின் ஐபிஓ

இந்திய கோகோ கோலா நிறுவனத்தின் ஐபிஓ

அக்.29-ல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு

பகிரவும் WhatsApp Facebook

கோகோ கோலாவின் இந்திய குளிர்பான பாட்டில் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் கோகோ கோலா ஹோல்டிங்ஸ், புதிய பங்குகளை வெளியிடுவதற்கான வரைவு ஆவணங்களை வரும் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்து, 2027-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்துஸ்தான் கோகோ கோலா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை சுமார் 1,000 கோடி டாலராக நிர்ணயிக்கவும், புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் சுமார் 100 கோடி டாலர் திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பகுதி, தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்துஸ்தான் கோகோ கோலா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் கோகோ கோலா 60 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. எஞ்சிய 40 சதவீதப் பங்குகளை ஜூபிலன்ட் பார்டியா குழுமம் கடந்த 2025-ம் ஆண்டு ரூ.12,500 கோடிக்கு வாங்கியது.
அதிக முதலீடு தேவைப்படும் பாட்டில் தயாரிப்புத் தொழிலில் நேரடி பங்களிப்பைக் குறைத்து, வர்த்தகப் பெயர் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் கவனம் செலுத்தும் கோகோ கோலாவின் உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக இந்தப் பங்கு விற்பனை அமைந்தது.


புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் முதலீட்டு வங்கிகளாக ஆக்சிஸ் கேபிடல் மற்றும் ஐஐஎஃப்எல் கேபிடல் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
இந்துஸ்தான் கோகோ கோலா ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான இந்துஸ்தான் கோகோ கோலா பெவரேஜஸ், 1997-ல் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 10 மாநிலங்களில் 14 கோகோ கோலா தயாரிப்பு ஆலைகளை நடத்துகிறது.

 2,000-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் 17 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குகிறது.
கடந்த 2024–25 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.12,751.29 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் குறைவு. சில மாநிலங்களில் உள்ள உற்பத்தி ஆலைகள் சுயாதீன பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து வருவாய் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்தி
உக்ரைனின் ஒலேஷ்கி நகரில் போர் நிறுத்தம் தொடக்கம் - காரணம் என்ன?
அடுத்த செய்தி
தாக்குதலை நிறுத்த ஹவுதிகளுக்கு 100 கோடி டாலர் வழங்க முன்வந்த சவுதி அரேபியா?

தொடர்புடைய செய்திகள்