Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கப்பல் போக்குவரத்து திறனை அதிகரிப்பது அவசியம்: ஐஓசி தலைவர்

கப்பல் போக்குவரத்து திறனை அதிகரிப்பது அவசியம்: ஐஓசி தலைவர்

கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) ஆகியவற்றைச் சேமிப்பதற்கான கட்டமைப்புகளிலும் இந்தியா முதலீடு செய்ய வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதன் மூலம் கிடைக்கும் பலனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள, இந்தியா தனது கப்பல் போக்குவரத்துத் திறனை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத் தலைவர் அரவிந்தர் சிங் சாஹ்னி தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற எரிசக்தி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கூட்டத்தில் சாஹ்னி பேசியதாவது: கச்சா எண்ணெயைக் கொண்டு வருவதற்குத் தேவையான எண்ணெய்க் கப்பல்கள் போதிய அளவில் இல்லாததால், தள்ளுபடி விலையில் எண்ணெய் கிடைத்தாலும், அதைக் கொண்டு வருவதற்கான சரக்குக் கட்டணம் அதிகமாக இருக்கிறது.

கப்பல் போக்குவரத்துத் துறையில் இந்தியா போதிய கவனம் செலுத்தவில்லை. இத்துறையில் தனது திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம். ரஷ்யாவின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு வருவதற்கான சரக்குக் கட்டணம், கருங்கடல் பகுதியில் அதிகரித்துள்ள பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய்க் கப்பல் கட்டண உயர்வு காரணமாக, இந்த மாதம் தொடக்கத்தில் வரலாறு காணாத அளவை எட்டியது.

மேலும், கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) ஆகியவற்றைச் சேமிப்பதற்கான கட்டமைப்புகளிலும் இந்தியா முதலீடு செய்ய வேண்டும்.

இதன்மூலம், அவசர காலங்களில் நாட்டின் எரிசக்தித் தேவைகளைச் சமாளிக்கக் கூடுதலான சில நாட்களுக்கான கையிருப்பை வைத்திருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
ஐரோப்பிய ஆற்றல் துறையில் தடம் பதிக்கும் அதானி குழுமம்
அடுத்த செய்தி
வீல்ஸ் இந்தியா Q2 வருவாய் ரூ.1,598 கோடியாக அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்