Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இடிஎஃப் வருமானத்தில் எல்ஐசி-க்கு முதலிடம்

இடிஎஃப் வருமானத்தில் எல்ஐசி-க்கு முதலிடம்

ஐந்தாண்டு வளர்ச்சிப் பட்டியலில் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் கோல்டு இடிஎஃப் 23.29 சதவீதத்துடன் முதலிடத்திலும், யூடிஐ கோல்டு இடிஎஃப் 23.07 சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும் உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்யாமல், அதன் விலை மாற்றங்களுக்கு ஏற்ப முதலீடு செய்ய உதவும் தங்கப் பரிவர்த்தனை நிதிகள் (Gold ETFs) மூலமான வருமானத்தில் 5 காலத்தில் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் கோல்டு இடிஎஃப் (LIC MF Gold ETF) 23.29 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளதாக வேல்யூ ரிசர்ச் (Value Research) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் டாடா கோல்டு இடிஎஃப் (Tata Gold ETF) 15.82 சதவீத வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. மூன்றாண்டு சராசரி ஆண்டு வளர்ச்சியில் ஐசிஐசிஐ புருடென்ஷியல் மற்றும் யூடிஐ கோல்டு இடிஎஃப் ஆகியவை தலா 31.20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

ஓராண்டு வருமானப் பட்டியலில் ஏபிஎஸ்எல் கோல்டு இடிஎஃப் (ABSL Gold ETF) 15.81 சதவீதத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஜெரோதா கோல்டு இடிஎஃப் (Zerodha Gold ETF) 15.77 சதவீத வருமானம் அளித்துள்ளது.

மூன்றாண்டு சராசரி ஆண்டு வளர்ச்சியில் ஐசிஐசிஐ புருடென்ஷியல் கோல்டு இடிஎஃப் மற்றும் யூடிஐ கோல்டு இடிஎஃப் ஆகியவை தலா 31.20 சதவீதத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளன. ஐந்தாண்டு வளர்ச்சிப் பட்டியலில் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் கோல்டு இடிஎஃப் 23.29 சதவீதத்துடன் முதலிடத்திலும், யூடிஐ கோல்டு இடிஎஃப் 23.07 சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. இந்த வருமான விவரங்கள் கடந்தகால செயல்பாட்டை மட்டுமே காட்டுவதாக வேல்யூ ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
தங்கப் பத்திரத்தில் 208.54% லாபம்
அடுத்த செய்தி
ஐரோப்பிய ஆற்றல் துறையில் தடம் பதிக்கும் அதானி குழுமம்

தொடர்புடைய செய்திகள்