Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதானி எனர்ஜி பங்கு 62% உயர வாய்ப்பு - ஜெஃபரீஸ்

அதானி எனர்ஜி பங்கு 62% உயர வாய்ப்பு - ஜெஃபரீஸ்

பங்கின் இலக்கு விலையை ரூ.1,980 ஆக நிர்ணயித்து, வாங்கும் பரிந்துரையைத் தொடர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மின்சார வர்த்தகம், மின் பரிமாற்றம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் தொழில்களின் வளர்ச்சியால், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கு விலை 62% உயர வாய்ப்புள்ளதாக ஜெஃபரீஸ் கணித்துள்ளது. பங்கின் இலக்கு விலையை ரூ.1,980 ஆக நிர்ணயித்து, வாங்கும் பரிந்துரையைத் தொடர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மின்சார வர்த்தகப் பிரிவு செயல்பாட்டு லாபம், ஓராண்டுக்கு முன்பிருந்த ரூ.11 கோடியிலிருந்து ரூ.800 கோடியாக அதிகரித்துள்ளது. இப்பிரிவின் காலாண்டு லாபம் 36% உயர்ந்ததுடன், ஒட்டுமொத்த செயல்பாட்டு லாபத்தில் அதன் பங்கு 25% ஆக அதிகரித்துள்ளது.


மின் பரிமாற்றத் திட்டங்களுக்கான ஏல வாய்ப்புகள் 45% வளர்ந்து, ரூ.1.4 லட்சம் கோடியை எட்டியுள்ளன. தற்போது ரூ.87,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ளன.
நிறுவனம் நிறுவியுள்ள ஸ்மார்ட் மீட்டர்களின் எண்ணிக்கை 1.48 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், பீகார், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தாமதங்களால், நடப்பு நிதியாண்டுக்கான நிறுவல் இலக்கு ஒரு கோடியிலிருந்து 80–90 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


மூலதனச் செலவு குறித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளால், முந்தைய ரூ.2,060 இலக்கு விலையை ஜெஃபரீஸ் குறைத்துள்ளது. அதிக வட்டிச் செலவு, சந்தைப் பங்கு இழப்பு ஆகியவை எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


மேலும், 2026–2030 நிதியாண்டுகளில் செயல்பாட்டு லாபம் ஆண்டுக்குச் சராசரியாக 25 சதவீதத்துக்கும் மேல் வளரும் என எதிர்பார்க்கிறது. அரசின் திட்டத்தில் இன்னும் 8.6 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படாததால், புதிய வர்த்தக வாய்ப்புகளும் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய செய்தி
56% உயர்வு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிகர லாபம் ரூ.1,912 கோடி!
அடுத்த செய்தி
ஆதித்ய பிர்லா ரியல் எஸ்டேட் லாபம் ரூ.918.70 கோடி

தொடர்புடைய செய்திகள்