Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

56% உயர்வு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிகர லாபம் ரூ.1,912 கோடி!

56% உயர்வு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிகர லாபம் ரூ.1,912 கோடி!

மொத்த வாராக்கடன் விகிதம் (ஜிஎன்பிஏ) முந்தைய காலாண்டின் 1.33 சதவீதத்திலிருந்து செப்டம்பரில் 1.19 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்து ரூ.1,912 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,225 கோடி நிகர லாபமாக ஈட்டி இருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில், தற்போது நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், வங்கியின் காலாண்டு முடிவுகள் குறித்து நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீ வத்சவா தெரிவித்ததாவது:
வங்கியின் நிகர வட்டி வருவாய் (என்ஐஐ) 26 சதவீதம் உயர்ந்து ரூ.3,867 கோடியை எட்டி உள்ளது. உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) முந்தைய காலாண்டைவிட ஒரு அடிப்படைப் புள்ளி உயர்ந்து 3.49 சதவீதமாக உள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.501 கோடியாக இருந்த வரிச் செலவினம், தற்போது ரூ.154 கோடியாகக் குறைந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் வங்கியின் மொத்தக் கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு 24.35 சதவீதம் அதிகரித்து ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. அதேசமயம், வைப்புத்தொகை 20 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.4.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

சில்லறை, விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ கடன்களின் மொத்த மதிப்பு 35 சதவீதம் உயர்ந்து ரூ.2.82 லட்சம் கோடியாக உள்ளது. வங்கியின் மொத்தக் கடன்களில் இவற்றின் பங்கு 75.65 சதவீதத்திலிருந்து 81.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.மாறாக, பெருநிறுவனங்களுக்கான கடன்கள் 7 சதவீதம் குறைந்து ரூ.62,795 கோடியாக உள்ளன.
ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி மாற்று வசதி மூலம் திரட்டிய சுமார் ரூ.11,000 கோடியை முழுமையாகக் கடன் வழங்கப் பயன்படுத்தி உள்ளோம். மேலும், ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு வணிகக் கடன் (இசிபி) வசதி மூலம் டிசம்பருக்கு முன்பாக 50 கோடி டாலரை திரட்ட வங்கி திட்டமிட்டுள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம் (ஜிஎன்பிஏ) முந்தைய காலாண்டின் 1.33 சதவீதத்திலிருந்து செப்டம்பரில் 1.19 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதமும் 0.18 சதவீதத்திலிருந்து 0.16 சதவீதமாகச் சரிந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கடன் வளர்ச்சி 24 சதவீதமாகவும், வைப்புத்தொகை வளர்ச்சி 20 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. பண்டிகைக் காலத் தேவைகள் அதிகரிக்கும் நிலையில், நடப்பு நிதியாண்டில் கடன் மற்றும் வைப்புத்தொகை வளர்ச்சி 20–21 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
B-schools revamp curricula to integrate AI into education
அடுத்த செய்தி
அதானி எனர்ஜி பங்கு 62% உயர வாய்ப்பு - ஜெஃபரீஸ்

தொடர்புடைய செய்திகள்