Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏக்வஸ் பங்கு 19% சரிவு

ஏக்வஸ் பங்கு 19% சரிவு

ஏக்வஸ் பங்கு இறுதியில் 9.90 சதவீதம் சரிந்து ரூ.218.40-க்கு முடிவடைந்தது.

பகிரவும் WhatsApp Facebook

ஏக்வஸ் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதன் பங்கு நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 19 சதவீதம் வரை சரிந்தது.

விண்வெளித் துறை உற்பத்தி நிறுவனமான ஏக்வஸின் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம், 2026–27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.52.3 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நஷ்டம் ரூ.21 கோடியாக இருந்தது.


நிறுவனத்தின் வருவாய் 45 சதவீதம் உயர்ந்து ரூ.409 கோடியானது. எனினும், செயல்பாட்டு லாபம் 45 சதவீதம் குறைந்து ரூ.24.5 கோடியாக சரிந்தது.
விநியோகச் சங்கிலி சிக்கல்களால் நுகர்வோர் பிரிவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. தேசிய பங்குச் சந்தையில் ஏக்வஸ் பங்கு இறுதியில் 9.90 சதவீதம் சரிந்து ரூ.218.40-க்கு முடிவடைந்தது.


ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனம் பங்குக்கான இலக்கு விலையை ரூ.220-லிருந்து ரூ.245 ஆக உயர்த்தியபோதும், பங்குகளைக் குறைக்கலாம் என்ற பரிந்துரையைத் தொடர்ந்துள்ளது.

முந்தைய செய்தி
மசகான் டாக் பங்குகள் 10% சரிவு
அடுத்த செய்தி
'Crisis in Strait of Hormuz will not be last of its kind'

தொடர்புடைய செய்திகள்