Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மசகான் டாக் பங்குகள் 10% சரிவு

மசகான் டாக் பங்குகள் 10% சரிவு

பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால ஈவுத்தொகையை நிறுவனம் அறிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இரண்டாம் காலாண்டில் நிகர லாபம் 54 சதவீதம் குறைந்ததைத் தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் பங்குகள் நேற்று 10 சதவீதம் வரை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மசகான் டாக் பங்கின் விலை வர்த்தகத்தின்போது ரூ.1,691 வரை வீழ்ச்சியடைந்தது. 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.749 கோடியிலிருந்து ரூ.344 கோடியாகக் குறைந்துள்ளது.


நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,929 கோடியாக இருந்த நிலையில், 16.5 சதவீதம் குறைந்து ரூ.2,446 கோடியாகியுள்ளது. லாப விகிதம் 23.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகச் சரிந்தது.


இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால ஈவுத்தொகையை நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான தகுதி நிர்ணய நாள் நவம்பர் 3. நவம்பர் 26-க்குள் தொகை வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.323.72 கோடியிலிருந்து ரூ.900 கோடியாக உயர்த்தவும் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இதற்கு உரிய அரசுத் துறை மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதல் தேவை.


மேலும், துணை நிறுவனமான கொழும்பு டாக்யார்டுக்கு ஆதரவாக, பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து ரூ.1,250 கோடி கடன் வசதி பெற நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முந்தைய செய்தி
Saudi Arabia offered Houthis $1 bn in Iran-brokered ceasefire deal: Media
அடுத்த செய்தி
ஏக்வஸ் பங்கு 19% சரிவு

தொடர்புடைய செய்திகள்