Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏர்டெல் ஆப்பிரிக்கா லாபம் 16% உயர்வு

ஏர்டெல் ஆப்பிரிக்கா லாபம் 16%  உயர்வு

மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.6 சதவீதம் அதிகரித்து 19.39 கோடியானது.

பகிரவும் WhatsApp Facebook

ஏர்டெல் ஆப்பிரிக்கா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வரிக்குப் பிந்தைய லாபம் 16 சதவீதம் உயர்ந்து, 25.4 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் லாபம் 21.9 கோடி டாலராக இருந்தது. வருவாய் 26 சதவீதம் உயர்ந்து 197 கோடி டாலரை எட்டியது. நிலையான நாணய மதிப்பில் வருவாய் வளர்ச்சி 20.6 சதவீதமாக இருந்தது.


மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.6 சதவீதம் அதிகரித்து 19.39 கோடியானது. இணையத் தரவு வாடிக்கையாளர்கள் 8.99 கோடியாகவும், மொபைல் பணப்பரிவர்த்தனை வாடிக்கையாளர்கள் 6.09 கோடியாகவும் உயர்ந்தனர்.


ஸ்மார்ட்போன் பயன்பாட்டு விகிதம் 51.6 சதவீதத்தை எட்டியது. வாடிக்கையாளர் ஒருவரின் தரவுப் பயன்பாடு 10.1 ஜிபியிலிருந்து 13.3 ஜிபியாக அதிகரித்தது. தரவுச் சேவையில் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் 10.7 சதவீதம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
India ranks second globally in AI-powered shopping
அடுத்த செய்தி
சென்னை புறநகர் ரயில் சேவைக்கான புதிய அட்டவணை அமல்

தொடர்புடைய செய்திகள்