Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னை புறநகர் ரயில் சேவைக்கான புதிய அட்டவணை அமல்

சென்னை புறநகர் ரயில் சேவைக்கான புதிய அட்டவணை அமல்

இந்த புறநகர் ரயில்களுக்கான கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்டம் வெளியிடும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்த ஆண்டுக்கான, சென்னை புறநகர் ரயில்கள் சேவைக்கான புதிய கால அட்டவணையில் இடம் பெற்றுள்ள மாற்றங்கள், 1.11.2026 முதல் அமலுக்கு வர உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம், கும்மிடிபூண்டி ஆகிய இடங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிபூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கூடவே வேலூர், திருவண்ணாமலை, திருப்பதி, நெல்லூர், பெட்ரகுண்டா, மேல்மருத்தூர், விழுப்புரம் ஆகிய இடங்களுக்கு முக்கியத்தட மின்சார ரயில்களும்(மெமு) வந்து செல்கின்றன.

இந்த புறநகர் ரயில்களுக்கான கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்டம் வெளியிடும்.

அதில் புதிதாக அறிமுகமான ரயில்கள், நீட்டிக்கப்பட்ட ரயில்கள் ஆகியவற்றின் புறப்படும், சேரும் நேரங்கள் சேர்க்கப்படும். ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களின் நேரம் இடையில் மாற்றப்பட்டிருந்தால் அந்த மாற்றங்களும் புதிய அட்டவணையில் இடம் பெறும்.

புதிய அட்டவணை நாளை நவ.01ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் மட்டும் ஞாயிறு கால அட்டவணை நாளை ஞாயிற்றுக்கிழமையும், வழக்கமான கால அட்டவணை நவ.2 திங்கட்கிழமையும் அமலுக்கு வரும்.

இந்த புதிய கால அட்டவணை குறித்தும், அதில் உள்ள மாற்றங்கள் குறித்தும் சென்னைக் கோட்டம் இன்று அறிவிக்க உள்ளது.

புதிய அட்டவணையின் சிறப்பம்சங்கள்:

  • சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் சமீபத்தில் பரிசோதனை முறையில் அறிமுகமான ஏசி மின்சார ரயில் சேவையும் அட்டவணையில் இடம் பிடித்துள்ளது. அதன் மூலம் இந்த சேவை நிரந்தரமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அத்துடன் சென்னை-திருவள்ளூர்-கடம்பத்தூர் இடையே புதிதாக ஏசி மின்சார ரயில் சேவை அறிமுகமாக உள்ளன. அட்டவணையில் உள்ளபடி ஏசி ரயில் திருவள்ளூரில் இருந்து பகல் 12.25மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 1.45மணிக்கு வந்து சேரும்.அதேபோல் சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 3.25மணிக்கு கடம்பத்தூர் சென்றடையும்.
  • சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் விரைவு மின்சார ரயில், எல்லா ரயில்நிலையங்களும் நின்றுச் செல்லும் ரயிலாக மாற்றப்படும்.
  • அதற்கு பதில் சென்னையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் விரைவு ரயிலாக மாற்றப்படுகிறது.
  • பட்டாபிராம் வரை இயக்கப்படும் 2 ரயில்கள் திருவள்ளூர் வரையிலும், திருவள்ளூர் வரை இயக்கப்படும் 2 ரயில்கள் கடம்பத்தூர் வரையிலும், கும்மிடிபூண்டி வரையில் இயக்கப்படும் 2 ரயில்கள் சூலூர்பேட்டை வரையிலும் இயக்கப்படுகின்றன. நீடிக்கப்படுகின்றன.
  • அரக்கோணம் வழித்தடத்தில் 59, கும்மிடிபூண்டி வழித்தடத்தில் 13, தாம்பரம் வழித்தடத்தில் 12ரயில் சேவைகளின் நேரம் மாற்றப்பட உள்ளன.
  • சென்னை கடற்கரை-வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கு ரயில் வழித்தடத்திலும், எந்த மாற்றமும் இல்லை.

முந்தைய செய்தி
ஏர்டெல் ஆப்பிரிக்கா லாபம் 16% உயர்வு
அடுத்த செய்தி
தைரோகேர் வருவாய் ரூ.270.8 கோடியாக அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்