Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

BHEL பங்குக்கு ‘வாங்கலாம்’ பரிந்துரை

BHEL பங்குக்கு ‘வாங்கலாம்’ பரிந்துரை

பங்குதாரர் மூலதன வருவாய் விகிதம் 6.2 சதவீதத்திலிருந்து 15.6 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் வலுவான ஆர்டர் கையிருப்பு, வருவாய் வளர்ச்சி வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, அதன் பங்குக்கான பரிந்துரையை ‘வாங்கலாம்’ என ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் உயர்த்தியுள்ளது.

பிஹெச்இஎல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் குறித்த ஆய்வறிக்கையில், பங்கின் இலக்கு விலை ரூ.453 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.387 சந்தை விலையிலிருந்து இது சுமார் 17 சதவீத உயர்வு வாய்ப்பைக் குறிக்கிறது.


இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமான பிஹெச்இஎல், மின்சாரம், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கான சாதனங்களைத் தயாரிக்கிறது. நிறுவனத்தின் ரூ.2.58 லட்சம் கோடி ஆர்டர் கையிருப்பு, எதிர்கால வருவாய்க்கு வலுவான ஆதாரமாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.


2025–26 முதல் 2027–28 வரையிலான காலத்தில், வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 27 சதவீதமும், பங்கு ஒன்றுக்கான லாபம் 79 சதவீதமும் கூட்டு வளர்ச்சி அடையும் என ஜியோஜித் கணித்துள்ளது.


திட்டச் செயலாக்க முன்னேற்றம், நிலையான செலவுகளின் சிறந்த பயன்பாடு ஆகியவை செயல்பாட்டு லாப வரம்பை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குதாரர் மூலதன வருவாய் விகிதம் 6.2 சதவீதத்திலிருந்து 15.6 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2027–28-ம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட விற்பனையின் 2.9 மடங்கு மதிப்பீட்டில் இலக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
சிடிஎஸ்எல் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
அடுத்த செய்தி
மதர்சன் சுமி வருவாய் 47% உயர்வு

தொடர்புடைய செய்திகள்