Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிடிஎஸ்எல் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

சிடிஎஸ்எல் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என செபி உத்தரவிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

விதிமுறைகளைப் பின்பற்றுவதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், சிடிஎஸ்எல் நிறுவனத்துக்குப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

2023–24 நிதியாண்டுக்கான ஆய்வில் இந்தக் குறைபாடுகள் தெரியவந்தன. பங்கு அடமானக் கோரிக்கைகளை நிராகரித்ததற்கான காரணங்களைச் சம்பந்தப்பட்ட தரப்புகளின் வைப்பகப் பங்கேற்பாளர்களுக்கு நிறுவனம் முறையாகத் தெரிவிக்கவில்லை.


அனுமதியின்றித் தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், பேரிடர் மீட்பு ஒத்திகைகளிலும் குறைபாடுகள் இருந்தன. இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் சரிசெய்யாததும், முழுமையான பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ளாததும் கண்டறியப்பட்டது.


அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என செபி உத்தரவிட்டுள்ளது. தவறினால், தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படலாம் என்றும் தனது உத்தரவில் எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி
பாம்பே கோட்டட் நிறுவன ஐபிஓவுக்கு அதிக வரவேற்பு
அடுத்த செய்தி
BHEL பங்குக்கு ‘வாங்கலாம்’ பரிந்துரை

தொடர்புடைய செய்திகள்