Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியப் பங்குச் சந்தையில் உள்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தையில் உள்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிப்பு

உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு 1.2 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நிஃப்டி 500 நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பங்கு கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 16.8% ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பங்கு 21.3% என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.

மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பத்தாவது காலாண்டாக இந்திய நிறுவனங்களில் தங்களது பங்குகளை அதிகரித்து வருகின்றன.


கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு 1.2 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 1.7 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. இருதரப்பின் முதலீட்டுப் போக்கும் வேறுபட்டுள்ளது.
பொதுமக்கள் மாதந்தோறும் செலுத்தும் எஸ்ஐபி முதலீடு சுமார் ரூ.34,000 கோடியை எட்டியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான பணவரத்து, உள்நாட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு முக்கிய ஆதரவாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.


உலகளாவிய பாதகமான நிகழ்வுகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தையில் பங்குகளை விற்று வருகின்றன. இருப்பினும், புதிய பங்கு வெளியீடுகளில் அவை முதலீடு செய்கின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து வாங்குகின்றன. நிஃப்டி 500 பட்டியலில் உள்ள 28 துறைகளில், 20 துறைகளில் உள்நாட்டு நிறுவனங்கள் தங்களது பங்குகளை ஓராண்டில் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் 21 துறைகளில் பங்குகளைக் குறைத்துள்ளன.


தனியார் வங்கிகளில் உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு 39.1% ஆக உள்ளது. இணையம் மற்றும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 32.5% ஆகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 23.3% ஆகவும் இருக்கிறது. ஓராண்டில் தனியார் வங்கிகளில் அவற்றின் பங்கு 5.5 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. காப்பீட்டில் 3.9, தொலைத்தொடர்பில் 3.1, இணையத் துறையில் 2.6 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது.


முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, இணையம், தொழில்நுட்பம், வாகனம், சுகாதாரம், உலோகம், காப்பீட்டுத் துறைகளுக்கான முதலீட்டு ஒதுக்கீட்டை உள்நாட்டு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. தனியார் வங்கிகளுக்கான ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைத்துள்ளன.


நிஃப்டி 50 நிறுவனங்களில் உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு 26.2% ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 22.4% ஆகக் குறைந்துள்ளது. பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் அனைத்திலும் உள்நாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது.

முந்தைய செய்தி
ஆட்டம்பெர்க், ரத்னதீப் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்
அடுத்த செய்தி
பாம்பே கோட்டட் நிறுவன ஐபிஓவுக்கு அதிக வரவேற்பு

தொடர்புடைய செய்திகள்