Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆட்டம்பெர்க், ரத்னதீப் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

ஆட்டம்பெர்க், ரத்னதீப் உள்ளிட்ட  4 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

விற்பனைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 7.65 கோடி பங்குகளை விற்க உள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ், ரத்னதீப் ரீடெய்ல், ஜிஎன்ஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர், பஞ்சாப் கார்பானிக் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது.

இந்த நிறுவனங்களின் வரைவு ஆவணங்களை ஆய்வு செய்த செபி, அக்டோபர் 27 முதல் 30 வரையிலான தேதிகளில் தனது கருத்துரைகளை வழங்கியுள்ளது. இதன்மூலம், நிறுவனங்கள் இறுதிக்கட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்து, பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை முன்னெடுக்கலாம்.


மும்பையைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆட்டம்பெர்க், புதிய பங்குகள் மூலம் ரூ.450 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள், விற்பனைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 7.65 கோடி பங்குகளை விற்க உள்ளனர். பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக ரூ.90 கோடி வரை திரட்டுவதையும் நிறுவனம் பரிசீலிக்கிறது.


தெலங்கானாவைச் சேர்ந்த பல்பொருள் அங்காடி நிறுவனமான ரத்னதீப் ரீடெய்ல், புதிய பங்குகள் வாயிலாக ரூ.400 கோடி திரட்டவுள்ளது. நிறுவனத்தின் முன்னோடிகளும் தங்களது பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய உள்ளனர். தென்னிந்தியாவில் 190 கடைகளை நடத்தும் இந்நிறுவனம், வெளியீட்டுக்கு முன்னதாக ரூ.80 கோடி வரை திரட்டவும் பரிசீலிக்கிறது.


இந்த முன்கூட்டிய நிதித் திரட்டல்கள் நடைபெற்றால், அதற்கேற்ப இரு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுத் தொகையும் குறைக்கப்படும்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாலை உள்கட்டமைப்பு நிறுவனமான ஜிஎன்ஐ, 2.10 கோடி புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், முன்னோடிகள் மற்றும் முதலீட்டாளர்கள் வசமுள்ள 93.88 லட்சம் பங்குகளும் விற்பனைக்கு வருகின்றன.


திரவ கார்பன் டைஆக்சைடு மற்றும் உலர் பனிக்கட்டி தயாரிக்கும் பஞ்சாப் கார்பானிக்கின் வெளியீட்டில் மொத்தம் 95 லட்சம் பங்குகள் இடம்பெற உள்ளன. இதில் 60 லட்சம் புதிய பங்குகள். மீதமுள்ள 35 லட்சம் பங்குகள் முன்னோடிகளால் விற்கப்பட உள்ளன.


ஆட்டம்பெர்க் நிறுவனம் திரட்டும் புதிய நிதியில் ரூ.150 கோடியை விளம்பரத்துக்கும், ரூ.100 கோடியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், ரூ.90 கோடியை கடன் திருப்பிச் செலுத்துவதற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ரத்னதீப் நிறுவனம் புதிய கடைகளைத் திறக்க ரூ.260 கோடியையும், கடனைத் திருப்பிச் செலுத்த ரூ.40 கோடியையும் ஒதுக்க உள்ளது. மீதித்தொகை பொதுவான நிறுவனத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

முந்தைய செய்தி
மு.க.அழகிரி மகள் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அடுத்த செய்தி
இந்தியப் பங்குச் சந்தையில் உள்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்