Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸின் புதிய பென்ஷன் திட்டம்

ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸின் புதிய பென்ஷன் திட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

'ஐசிஐசிஐ லைஃப் கேரன்டீடு இண்டெக்ஸ்டு பென்ஷன்' என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இது குறித்து ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் கூறியதாவது: இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு நிலையான உத்தரவாத ஓய்வூதியம் மற்றும் சந்தை சார்ந்த மாறுபடும் ஓய்வூதியம் ஆகிய இரண்டின் பலன்களையும் ஒருங்கே வழங்குகிறது. இதில் 60 முதல் 100 சதவீதம் வரையிலான ஓய்வூதியம் கட்டாயம் பாலிசிதாரரின் கைக்கு கிடைக்கிறது. மீதமுள்ள பகுதியை நிஃப்டி 50 டோட்டல் ரிட்டர்ன் இண்டெக்ஸ் உடனும் இணைத்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பங்குச்சந்தை வளர்ச்சியில் பங்கேற்றுப் பணவீக்கத்திலிருந்து ஓய்வுகால வருமானத்தை பாதுகாக்க முடியும். இத்திட்டம் தனிநபர் மற்றும் தம்பதியருக்கான வாழ்நாள் பென்சன் உத்தரவாதத்துடன் , பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு செலுத்திய பிரீமியத் தொகையைப் பரிந்துரைக்கப்பட்டவருக்கு முழுமையாகத் திரும்ப அளிக்கும் வசதியையும் கொண்டுள்ளது.

அவசர கால பணத்தேவைகளுக்காக 'ஆனுவிட்டி அட்வான்ஸ்' வசதியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உத்தரவாத ஓய்வூதியத்தில் 99 சதவீதம் வரை ஒரே தவணையாக முன்பணமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதில் உள்ளது. இவ்வாறு ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் கூறியுள்ளது.


ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நிறுவன தலைமை தயாரிப்பு அதிகாரி விகாஸ் குப்தா கூறுகையில், "மனிதர்களின் ஆயுட்காலம் மற்றும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், நிலையான நிதி பாதுகாப்பையும் சந்தை சார்ந்த கூடுதல் வளர்ச்சியையும் வழங்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
முந்தைய செய்தி
இன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட உலகப் பங்குச் சந்தைகள்
அடுத்த செய்தி
Risks spelled out for Anthropic investors include possible harms from runaway AI

தொடர்புடைய செய்திகள்