Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட உலகப் பங்குச் சந்தைகள்

இன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட உலகப் பங்குச் சந்தைகள்

அமெரிக்காவில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.7 சதவீதமும், நாஸ்டாக் குறியீடு 0.8 சதவீதமும் உயர்ந்தன.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி முடிவுகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், உலகப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டன.


ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் தொடக்க வர்த்தகத்தில் ஜெர்மனியின் டாக்ஸ் குறியீடு 0.1 சதவீதமும், பிரான்சின் சிஏசி 40 குறியீடு 0.3 சதவீதமும் சரிந்தன. பிரிட்டனின் எஃப்டிஎஸ்இ 100 குறியீடு ஒரு சதவீதம் குறைந்தது. ஆசியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால், டோக்கியோ மற்றும் சியோல் சந்தைகள் உயர்ந்தன. தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 3.1 சதவீதம் உயர்ந்து 5,638.34 புள்ளிகளில் முடிவடைந்தது. அந்நாட்டின் எஸ்கே ஹைனிக்ஸ் பங்கு 5.2 சதவீதமும், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு 4.2 சதவீதமும் உயர்ந்தன.

உலக அளவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தென் கொரியாவின் பொருளாதாரம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 3.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது. ஜப்பானின் நிக்கி குறியீடு 1.7 சதவீதம் உயர்ந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 0.7 சதவீதமும், ஷாங்காய் குறியீடு 1.3 சதவீதமும் சரிந்தன.

அமெரிக்காவில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.7 சதவீதமும், நாஸ்டாக் குறியீடு 0.8 சதவீதமும் உயர்ந்தன. சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் பங்கு 2.4 சதவீதம் உயர்ந்து சந்தையின் ஏற்றத்துக்கு முக்கியப் பங்காற்றியது. செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அந்த முதலீடுகள் லாபத்தைத் தருமா என்ற கவலையும் முதலீட்டாளர்களிடையே நீடிக்கிறது. ஆல்பபெட் மற்றும் மைக்ரோசாப்ட் புதன்கிழமையும், அமேசான் வியாழக்கிழமையும் நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய யென்னின் மதிப்பு 157.75-ஆக இருந்தது.



முந்தைய செய்தி
ஆகஸ்டில் அதிகளவு சரக்கு கையாண்ட திருச்சி விமான நிலையம்
அடுத்த செய்தி
ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸின் புதிய பென்ஷன் திட்டம்

தொடர்புடைய செய்திகள்