Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 29% உயர்வு

கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 29% உயர்வு

நடப்பாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்ந்து, ரூ.4,212 கோடியாக அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதேகாலத்துடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகரித்து, ரூ.4,212 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட தனியார் துறையைச் சேர்ந்த கோடக் மஹிந்திரா வங்கி, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,253.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்ந்து, ரூ.4,212 கோடியாக அதிகரித்துள்ளது.


மேலும், செப்டம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.29,426.88 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.7,311 கோடியாக இருந்த நிலையில், தற்போது 15.70 சதவீதம் அதிகரித்து ரூ.8,459 கோடியாக உயர்ந்துள்ளது.


வங்கியின் நிகர வட்டி லாபம் (என்ஐஎம்) கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 4.54 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 4.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான எஃப்சிஎன்ஆர்-பி டெபாசிட்கள் மூலம் அதிகரித்த பணப் புழக்கம் இதற்குக் காரணம் என வங்கி தெரிவித்துள்ளது. இக்காலாண்டில் ரூ.55,344 கோடி அளவுக்கு எஃப்சிஎன்ஆர் டெபாசிட்களை வங்கி திரட்டியுள்ளது.


மேலும், வங்கியின் நிகரக் கடன் வழங்கல் ஓராண்டில் 25 சதவீதம் உயர்ந்து ரூ.5.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சராசரி மொத்த டெபாசிட்கள் 19 சதவீதம் வளர்ந்து ரூ.6.06 லட்சம் கோடியாக உள்ளது.ஒட்டுமொத்தமாக வங்கியின் சொத்து தரமும் மேம்பட்டுள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டு 1.39 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 1.04 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதமும் 0.32 சதவீதத்திலிருந்து 0.24 சதவீதமாகச் சரிந்துள்ளது.

முந்தைய செய்தி
FICCI seeks Dutch investment in mfg, tech
அடுத்த செய்தி
சாய்ஸ் லாக்கிங் - அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 3,878 இடங்கள்

தொடர்புடைய செய்திகள்