Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சாய்ஸ் லாக்கிங் - அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 3,878 இடங்கள்

சாய்ஸ் லாக்கிங் - அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 3,878 இடங்கள்

ஒட்டுமொத்தமாக 3,878 இடங்கள் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் துணை மருத்துவ இடங்களில் 3,878 புதிய மற்றும் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வு குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிறுவனங்களில் உள்ள பி.எஸ்சி. செவிலியர் படிப்பில் 440 கூடுதல் இடங்களும், 660 புதிய இடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, அலைடு மற்றும் ஹெல்த்கேர் படிப்புகளில் 1,646 கூடுதல் இடங்கள், 1,132 புதிய இடங்கள் என ஒட்டுமொத்தமாக 3,878 இடங்கள் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளன.


மேலும், நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை உளவியல் மற்றும் இளங்கலை மருத்துவம் மற்றும் மனநல சமூகப்பணி ஆகிய இரு புதிய பட்டப்ப டிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு, கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கூடுதல் இடங்கள் மற்றும் புதிய படிப்புகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வரும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.


எனவே, மாணவ-மாணவிகள் தங்களின் விருப்பமான இடங்களைப் பதிவு செய்து உறுதி செய்யும் 'சாய்ஸ் லாக்கிங்' நடைமுறையின்போது, இந்த கூடுதல் அரசு இடங்களையும் புதிய படிப்புகளையும் தங்களின் கவனத்தில் கொண்டு விருப்பத் தேர்வுகளைப் பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 29% உயர்வு
அடுத்த செய்தி
இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான் - என்ன பாதிப்பு?

தொடர்புடைய செய்திகள்