Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உலகப் பங்குச் சந்தைகளில் முதலீட்டு - ஜியோ பிளாக்ராக் புதிய நிதி அறிமுகம்

உலகப் பங்குச் சந்தைகளில் முதலீட்டு - ஜியோ பிளாக்ராக் புதிய நிதி அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் இதில் இடம்பெறும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய முதலீட்டாளர்கள் சர்வதேசப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வகையில், கிஃப்ட் சிட்டி மூலம் ஜியோபிளாக்ராக் அட்வான்டேஜ் வேர்ல்ட் ஈக்விட்டி நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோ பிளாக்ராக் இன்டர்நேஷனல் ஏஎம்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திறந்தநிலை நிதி, தனது சொத்துகளில் 90 முதல் 100 சதவீதத்தை பிளாக்ராக்கின் அட்வான்டேஜ் வேர்ல்ட் ஈக்விட்டி நிதியில் முதலீடு செய்யும்.


இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களில் முதலீட்டு வாய்ப்பு கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் இதில் இடம்பெறும்.


குறைந்தபட்ச தொடக்க முதலீடு 5,000 அமெரிக்க டாலர். கூடுதல் முதலீட்டுக்கான குறைந்தபட்சத் தொகை 1,000 டாலர். வெளியேறும் கட்டணம் இல்லை. நேரடித் திட்டத்துக்கான உத்தேச செலவு விகிதம் 0.90 சதவீதமாகவும், வழக்கமான திட்டத்துக்கு 1.40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்திய முதலீடுகளுடன் உலகளாவிய வாய்ப்புகளையும் இணைத்துக்கொள்ள இந்நிதி உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
China attempts to change the world with global initiatives
அடுத்த செய்தி
பழனி முருகன் கோயில் பிரசாதம் விலை உயர்வு: லிஸ்ட் இதோ

தொடர்புடைய செய்திகள்