Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பழனி முருகன் கோயில் பிரசாதம் விலை உயர்வு: லிஸ்ட் இதோ

பழனி முருகன் கோயில் பிரசாதம் விலை உயர்வு: லிஸ்ட் இதோ

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிரசாத விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு, நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, அதிரசம், முறுக்கு, தேன் தினைமாவு, சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட 6 வகையான பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிரசாத விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட லட்டு ரூ.20-க்கும் , ரூ.15 -க்கு விற்பனை செய்யப்பட்ட அதிரசம் ரூ.20-க்கும், ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட முறுக்கு ரூ.25-க்கும், ரூ.15-க்கு விற்பனையான சர்க்கரை பொங்கல் ரூ.20, புளியோதரை ரூ.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


புதிய விலைப் பட்டியல்
 
லட்டு - 1 50 கிராம் ரூ.20

அதிரசம் - 1 50 கிராம் ரூ.20

முறுக்கு - 1 50 கிராம் ரூ.25

தேன் தினைமாவு 50 கிராம் ரூ.15

சக்கரை பொங்கல் 150 கிராம் விலை ரூ.20

புளியோதரை 150 கிராம் ரூ.20
முந்தைய செய்தி
உலகப் பங்குச் சந்தைகளில் முதலீட்டு - ஜியோ பிளாக்ராக் புதிய நிதி அறிமுகம்
அடுத்த செய்தி
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்