Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்வு - கைகொடுத்த ஐடி பங்குகள்

சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்வு - கைகொடுத்த ஐடி பங்குகள்

சென்செக்ஸ் 308 புள்ளிகளும், நிஃப்டி 116 புள்ளிகளும் உயர்ந்தன.

பகிரவும் WhatsApp Facebook

தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளில் வலுவான வாங்குதல், டிரென்ட் நிறுவனத்தின் லாப உயர்வு ஆகியவற்றால் இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து இரண்டாவது அமர்வாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 308 புள்ளிகளும், நிஃப்டி 116 புள்ளிகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 308.49 புள்ளிகள் (0.42 சதவீதம்) அதிகரித்து 74,459.53 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே 591.55 புள்ளிகள் உயர்ந்து 74,742.59 புள்ளிகளை எட்டியது.


தேசியப் பங்குச் சந்தையின் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 116.35 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்ந்து 23,053.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. வார அடிப்படையில் சென்செக்ஸ் 1,335.7 புள்ளிகள் அல்லது 1.82 சதவீதமும், நிஃப்டி 453.1 புள்ளிகள் அல்லது 2 சதவீதமும் முன்னேறின.
டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான டிரென்ட் பங்கு, வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 7 சதவீதம் உயர்ந்தது. செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து ரூ.468 கோடியானதாக அறிவிக்கப்பட்டது, பங்கு உயர்வுக்கு காரணமாக அமைந்தது.


இன்டர்குளோப் ஏவியேஷன், இன்ஃபோசிஸ், என்டிபிசி, பவர் கிரிட், எட்டர்னல், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகியவையும் முக்கிய ஆதாயப் பங்குகளாக இருந்தன. மாறாக, பாரத ஸ்டேட் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
பிஎஸ்இ ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 2.09 சதவீதமும், மிட்கேப் செலக்ட் குறியீடு 0.63 சதவீதமும் வீழ்ந்தன. துறைவாரியாக ஃபோகஸ்டு ஐடி 1.91 சதவீதம், ஐடி 1.53 சதவீதம், மருத்துவமனைகள் 1.05 சதவீதம், சுகாதாரம் 0.95 சதவீதம் உயர்ந்தன. வீட்டுவசதி நிதித் துறை 2.90 சதவீதம் சரிந்தது.


கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியிலும் சந்தைகள் முன்னேறியதாக என்ரிச் மணி தலைமைச் செயல் அதிகாரி பொன்முடி தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான விற்பனை அழுத்தம் ஆசியச் சந்தைகளில் நிலவியபோதும், முதலீட்டாளர்கள் தொழில்நுட்பப் பங்குகளில் முதலீட்டைத் திருப்பியதால் ஐடி துறை வலுப்பெற்றதாக அவர் கூறினார்.


சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.17 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 117.4 அமெரிக்க டாலராக இருந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ரூ.943.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றனர்.


முந்தைய அமர்வான வியாழக்கிழமை சென்செக்ஸ் 905.01 புள்ளிகள் உயர்ந்து 74,151.04 புள்ளிகளிலும், நிஃப்டி 237.90 புள்ளிகள் அதிகரித்து 22,936.75 புள்ளிகளிலும் நிறைவடைந்திருந்தன. நேற்றும் அந்த ஏற்றம் தொடர்ந்தது.

முந்தைய செய்தி
ஈரானுடன் போரை தவிர்க்க வான்ஸ் ரகசிய முயற்சி
அடுத்த செய்தி
ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

தொடர்புடைய செய்திகள்