Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லாபம் 14% உயர்வு

சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லாபம் 14% உயர்வு

ஏற்றுமதி 57 சதவீதம் அதிகரித்து ரூ.530.95 கோடியாகவும் உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 14 சதவீதம் உயர்ந்து, ரூ.159.98 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.140.27 கோடி நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டு, அரையாண்டுக்கான முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


அதில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 32 சதவீதம் அதிகரித்து ரூ.1,760.77 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.1,338.37 கோடியாக இருந்தது. உள்நாட்டு விற்பனை 23 சதவீதம் உயர்ந்து ரூ.1,172.90 கோடியாகவும், ஏற்றுமதி 57 சதவீதம் அதிகரித்து ரூ.530.95 கோடியாகவும் உள்ளது.

 மூலப்பொருட்களின் விலை உயர்ந்தபோதிலும், வட்டி, தேய்மானம் மற்றும் வரிகளுக்கு முந்தைய செயல்பாட்டு லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.277.58 கோடியாக உயர்ந்துள்ளது.

 மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், தனிப்பட்ட நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.310.95 கோடியாகவும், ஒருங்கிணைந்த நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.341.32 கோடியாகவும் உள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டுக்கு ஒரு பங்குக்கு ரூ.4.05 இடைக்கால டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


முந்தைய செய்தி
தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்
அடுத்த செய்தி
Leopard videos spark fear among residents

தொடர்புடைய செய்திகள்