Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற 2 தேர்தல் ஆணையர்களையும் மீறி, சட்டவிரோதமாகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாகவும் அரசியல் சார்புடனும் செயல்பட்டுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய தலைமைதேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற 2 தேர்தல் ஆணையர்களையும் மீறி, சட்டவிரோதமாகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாகவும் அரசியல் சார்புடனும் செயல்பட்டுள்ளார். இதனால் அவரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக எஸ்ஐஆர் மூலம் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இனி எந்தத் தேர்தலிலும் பயன்படுத்தக் கூடாது.

இதேபோல, அனைத்து மாநிலங்களிலும் எஸ்ஐஆர் நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இனிமேல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்போது, ஒவ்வொரு வாக்காளருக்கும் போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். பெயரை நீக்குவதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அறிவிப்பு கொடுத்து, அவர்களின் விளக்கத்தைக் கேட்க வேண்டும்.
தேர்தல் நடைமுறையின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில்,. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
ஏர்டெல் வாடிக்கையாளர்- வீர்தாஸ் சந்திப்புக்கு ஏற்பாடு
அடுத்த செய்தி
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லாபம் 14% உயர்வு

தொடர்புடைய செய்திகள்