Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆயுத பூஜைக்கு ஊருக்கு செல்லத் தயாரா? - சிறப்பு ரயில்கள் லிஸ்ட் இதோ!

ஆயுத பூஜைக்கு ஊருக்கு செல்லத் தயாரா? - சிறப்பு ரயில்கள் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊருக்கு புறப்பட ஆரம்பித்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் ஆயுத பூஜை, வட மாநிலங்களில், 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நவராத்திரி, ஆயுத பூஜை திருவிழா இம்மாதம் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.


இதையொட்டி தமிழகத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊருக்கு புறப்பட ஆரம்பித்துள்ளனர். இதற்கு வசதியாக சென்னை தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு, வாரந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து அக்.13, 20, 27 தேதிகளில் செவ்வாய் காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06075), மறுநாள் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு சந்திரகாசி சென்றடையும். சந்திரகாசியில் இருந்து அக்.14, 21, 28 தேதிகளில் புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06076), வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஒங்கோல், விஜயவாடா, ராஜமுந்த்ரி, துவ்வாடா, விஜயநகரம், பலாசா, பிரம்மபூர், குர்தா ரோடு, புவனேஸ்வரம், நாராஜ் மார்தாபூர், ஜாஜ்பூர்-கியோஞ்சர் ரோடு, பத்ரக், பாலசோர், காரக்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது.
முந்தைய செய்தி
செம்பு இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் : மின்சாரப் பொருள் வியாபாரிகள் சங்கம்
அடுத்த செய்தி
ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்களுக்குத் தடை - அதிரடி உத்தரவு

தொடர்புடைய செய்திகள்