Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்சிக்கு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

திருச்சிக்கு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

அக்டோபர் 16 அன்று வெளியான தகவலின்படி, சென்னை–திருச்சி விமானக் கட்டணம் வழக்கமான ரூ.5,066-லிருந்து ரூ.9,896 ஆக உயர்ந்திருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் வெளிமாநில நகரங்களில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களின் கட்டணம் வழக்கமான நாட்களைவிட கணிசமாக அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து நவம்பர் 6-ம் தேதி திருச்சிக்கு வருவதற்கான குறைந்தபட்ச விமானக் கட்டணம் ரூ.25,450-ஆகவும், நவம்பர் 7-ஆம் தேதி ரூ.19,654-ஆகவும் உள்ளது. இதேபோல் அபுதாபியில் இருந்து முறையே ரூ.23,861, ரூ.19,654 என கட்டணம் காணப்படுகிறது. குவைத்தில் இருந்து நவம்பர் 6-ம் தேதி ரூ.31,671-ஆகவும், 7-ம் தேதி ரூ.26,156 எனவும், தோஹாவில் இருந்து முறையே ரூ.40,824, ரூ.22,361 எனவும் கட்டணம் உயர்ந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து நவம்பர் 6-ம் தேதி ரூ.32,232-ஆகவும், 7-ம் தேதி ரூ.48,571 வரையும் கட்டணம் காணப்படுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களிலும் கட்டணம் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நவம்பர் 6, 7 தேதிகளில் விமானத்தைப் பொறுத்து ரூ.52,778 முதல் ரூ.75,335 வரை கட்டணம் உள்ளது. கோலாலம்பூரில் இருந்து ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை கட்டணம் காணப்படுகிறது.


முந்தைய செய்தி
ஆம்பூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
அடுத்த செய்தி
சுஸ்லான் Q2 வருவாய் 26% உயர்வு : வருவாய் ரூ.4,869 கோடியாக அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்